கொலைவெறி தாக்குதல்: 5 பேர் பலியான சோகம்

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள கால்நடைப்பண்ணை ஒன்றில் இருந்து அவசர அழைப்பு வந்ததை அடுத்து பொலிசார் சம்பவ பகுதிக்கு விரைந்துள்ளனர்.

பகல் 10.30 அளவில் இந்த அழைப்பு வந்ததாக பொலிசார் தெரிவித்துள்ளனர். சம்பவ பகுதிக்கு விரைந்த பொலிசார், குடியிருப்பு ஒன்றில் 5 பேர் துப்பாக்கி குண்டுக்கு பலியான நிலையில் கிடந்துள்ளனர்.

இச்சம்பவத்தை அடுத்து விசாரணை மேற்கொண்ட பொலிசாருக்கு என்ன நடந்தது என்பது தொடர்பான எந்த தகவலும் கிடைக்கவில்லை என தெரியவந்துள்ளது.

இந்த தாக்குதலில் ஈடுபட்டது கும்பலா அல்லது, கொல்லப்பட்டவர்களே தங்களுக்குள் தாக்குதலில் ஈடுபட்டனர்களா என்பது தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.