வங்கக் கடலில் இன்று காலை 7.02 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. சென்னைக்கு வடகிழக்கே 609 கிமீ தொலைவில் கடல் மட்டத்தில் இருந்து 10 கிமீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இந்த நிலநடுக்கமானது, ரிக்டர் அளவு கோலில் 4.9 அலகாக பதிவாகி உள்ளது.
இந்த நிலநடுக்கம் காரணமாக சென்னையில் பல்வேறு இடங்களில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. சில வினாடிகள் நில அதிர்வு இருந்ததாக, பலர் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர். நிலநடுக்கம் காரணமாக எந்த சேதமும் ஏற்பட்டதாக தகவல் வெளியாகவில்லை. சிலர் வீட்டை விட்டு வெளியில் வந்து நின்றனர். மேலும், இந்தியாவை சுற்றி உள்ள நாடுகளில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுவது குறிப்பிடத்தக்கது.
I thought I was dreaming but it turns out to be true!
Anyone else felt the tremor? #EarthquakeInChennai #Earthquake
— Sastika Rajendran (@Sastika_R) February 12, 2019