ஓட்டலில் தூங்கிக் கொண்டிருந்தவர்களுக்கு நடந்த சோகம்!

டெல்லியின் கரோல் பாக் பகுதியில் செயல்பட்டு வரும் அர்பித் பேலஸ் ஓட்டல் அமைந்துள்ளது. அங்கு இன்று அதிகாலை திடீரென தீவிபத்து ஏற்பட்டது. மளமளவென பரவிய தீ, கொளுந்துவிட்டு எரியத் தொடங்கியது.

இதுகுறித்து உடனடியாக தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த அவர்கள், தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்ததாக முதலில் தெரிவித்தனர். தீவிபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தீவிபத்துக்கு 9 பேர் பலியானதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

மேலும், மீட்கப்பட்டவர்களை அருகிலுள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் மின்கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.