கார் விபத்தில் சிக்கிய இந்திய அணி வீரர் சுரேஷ் ரெய்னா?

இந்திய அணியின் நட்சத்திர வீரர்களில் ஒருவராக திகழ்ந்தவர் சுரேஷ் ரெய்னா. இந்திய அணியின் மிகசிறந்த வீரராக பல போட்டிகளில் இந்திய அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றுள்ளார்.

IPL-லில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். தற்போது இந்திய அணியில் இடம் கிடைக்காமல் தவித்து வருகிறார். வருகிற உலககோப்பை தொடரிலும் ரெய்னா விளையாட வாய்ப்பே இல்லை என்றே பலரும் கூறுகின்றனர்.

இந்நிலையில், சுரேஷ் ரெய்னா சென்றகார் விபத்துக்குள்ளானதாக ஒரு செய்தி சமூக வலைத்தளத்தில் நேற்றிலிருந்து பரவி வருகிறது. இந்த செய்தியால் சுரேஷ் ரெய்னாவின் ரசிகர்கள் வருத்தம் அடைந்தனர். ஆனால், அந்த செய்தி முற்றிலும் போலியானது என்று சுரேஷ் ரெய்னாவே தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். அதி அவர் பதிவு செய்தவை, கடந்த சில நாட்களாக என் கார் விபத்துக்குள்ளானதாக தவறான செய்திகள் வலம் வருகிறது. இதனால் என் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர். இனிமேல், இப்படி தவறான தகவலை பதிவிட வேண்டாம் என்றும் தான் நலமாக தான் இருக்கிறேன். இப்படி தவறான தகவலை பரப்பியவரை சட்டப்படி தண்டிப்பேன் என்றும் பதிவிட்டுள்ளார்.