மகாராஷ்டிரா மாநிலத்தில் இருக்கும் மும்பை பவாய் பகுதியில் பல்பொருள் அங்காடியானது உள்ளது. இந்த அங்காடியில் கடந்த 6 ம் தேதியன்று பொருட்களை வாங்க வந்த 32 வயதுடைய பெண்., சாக்லெட்டை திருடியுள்ளார்.
இதனை கண்ட கடை பணியாளர்கள்., 32 வயதுடைய பெண்ணிடம் இருந்து 10 சாக்லேட்டுகளை பறிமுதல் செய்து விஷயம் குறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு எம்.ஐ.டி.சி. காவல் நிலையத்தில் இருந்த மதுக்கர் அவ்காத் (48) விரைந்தார்.
அங்கு கடையின் பணியாளர்கள் மற்றும் சாக்லேட் திருடிய பெண்ணிடம் விசாரணை மேற்கொண்ட காவல் துறை அதிகாரி., அந்த பெண்ணிடம் எழுத்துபூர்வமாக எழுதி வாங்கி விட்டு அவரை விடுத்துள்ளார். அந்த நேரத்தில்., அவரது அலைபேசி எண் மற்றும் ஆதார் கார்டுகளை கேட்டறிந்துள்ளர்.
இதனை வைத்து தனது அலைபேசியில் பெண்ணுக்கு தொடர்பு கொண்ட காவல் துறை அதிகாரி., அங்குள்ள ஆறே சாலை பகுதிக்கு வரசொல்லியிருக்கிறார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பெண்ணை திருட்டு புகாரின் பேரில் நடவடிக்கை மேற்கொண்டு விடுவதாக கூறி மிரட்டியுள்ளார்.
இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த பெண் செய்வதறியாது திகைக்கவே., வலுக்கட்டாயமாக மிரட்டி அங்குள்ள விடுதிக்கு அழைத்து சென்று பலாத்காரம் செய்துள்ளார். மேலும்., அந்த பெண்ணின் அலைபேசியில் செலஃபீ எடுத்துள்ளார்.
தனக்கு நடந்த பிரச்னையை வெளியே சொல்ல முடியாமல் அந்த பெண் தவித்து வந்த நிலையில்., எதிர்பாராதவிதமாக மனைவியின் அலைபேசியை உபயோகம் செய்துகொண்டு இருந்த கணவரின் கண்ணிற்கு அந்த புகைப்படம் தென்பட்டுள்ளது.
இதனை கண்டு அதிர்ச்சியடைந்த கணவர்., தனது மனைவியிடம் முறையிடவே., தனக்கு நடந்த விஷயத்தை கூறி கதறியழுத்துள்ளார். இதனையடுத்து உடனடியாக பவாய் காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்தார்.
இவரின் புகாரை ஏற்ற காவல் துறையினர் உடனடியாக காவல் துறை அதிகாரியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.