தன்னை மகள் உதாசீனப்படுத்துவதாக தொலைக்காட்சிப் பேட்டிகள் கொடுக்கும் தாமஸ் மெர்க்கல் ஒரு பக்கம், ஒவ்வொரு நேரம் ஒவ்வொரு விதமாக பேசும் சகோதரி சமந்தா மெர்க்கல் இன்னொரு பக்கம், எந்த பக்கத்திலிருந்தே வருகிறதென தெரியாமல் திடீர் திடீரென முளைக்கும் உறவினர்களின் விமர்சனங்கள் இன்னொரு பக்கம் என நாலா பக்கங்களிலும் இருந்து பிரித்தானிய இளவரசி மேகன் மீதான தாக்குதல்களைப் பார்க்கும்போது கல் மனக்காரியோ இவர் என எண்ண வைத்தது அவரது குடும்ப உறவுகள்.
ஆனால் மேகனின் தந்தையான தாமஸ் மெர்க்கலின் வேடத்தைக் கலைத்து விட்டது அவரது சமீபத்திய செயல் ஒன்று.
தொடர்ந்து இளவரசர் ஹரியின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையிலும், தங்கள் திருமண வாழ்வின் அமைதியைக் குலைக்கும் வகையிலும் பேட்டிகள் கொடுத்துக் கொண்டிருந்த தனது தந்தையிடம் கண்ணீர் மல்க அனைத்தையும் நிறுத்துமாறு கெஞ்சி மேகன் எழுதியிருந்த கடிதம் ஒன்றை, கொஞ்சம் கூட உணர்ச்சியே இல்லாத ஜடம் போல பத்திரிகைக்கு கொடுத்திருக்கிறார் தாமஸ்.
இதிலிருந்தே தான் மேகன் மீது மிகுந்த அன்பு வைத்திருப்பதாக அவர் போட்ட நாடகமெல்லாம் வேடம் என்பது தெளிவாக தெரிய வந்திருக்கிறது.
ஓசி விளம்பரம் தவிர அந்த மனிதனுக்கு வேறெதிலும் ஆர்வம் இல்லை என்பதும் நன்றாகவே தெரியவந்துள்ளது.
ஐந்து பக்கங்கள் கொண்ட அந்த கடிதத்தில் மேகன், அப்பா, வேதனையை ஏற்படுத்துகிறீர்கள் என்பதைக்கூட புரிந்து கொள்ளாமல் செயல்படுகிறீர்களே என்ற கனத்த இதயத்துடன் இந்த கடிதத்தை எழுதுகிறேன்.
ஹரியுடனான திருமணத்தை கொச்சைப்படுத்தி விமர்சித்ததால் எனது மனதை சுக்கு நூறாக நொறுக்கி விட்டீர்கள் என்று எழுதியிருக்கிறார் மேகன்.
என்னை நேசிக்கிறேன் என்று பேட்டிகளில் சொல்கிறீர்கள், அது உண்மையென்றால் தயவு செய்து எங்களை நிம்மதியாக வாழ விடுங்கள், பொய் சொல்வதை நிறுத்துங்கள், எங்களுக்கு வேதனை ஏற்படுத்துவதை நிறுத்துங்கள், என் கனவனுடனான உறவை கொச்சைப்படுத்துவதை நிறுத்துங்கள் என கண்ணீருடன் அந்த கடிதத்தை எழுதியுள்ளார் மேகன்.
ஆனால், என்னுடன் சமாதாதானத்திற்கு வருவாள் என்று நினைத்தால், மேகன் என்னை காயப்படுத்துகிறாள் என்று கூறி, தனது அன்பு மகள் மனம் வருந்தி எழுதிய அந்த கடிதத்தைக் கூட பத்திரிகைக்கு கொடுத்து தந்தை மகள் என்ற உறவையே கொச்சைப்படுத்திவிட்டார் அந்த மனிதர்.
எப்படியோ அதுவும் நன்மையாகவே முடிந்திருக்கிறது, இவ்வளவு நாளும் பாசமுள்ள தந்தையாக அவர் போட்ட வேடம் கலைந்து அவரது உண்மையான முகம் உலகுக்கு தெரிய ஆரம்பித்திருக்கிறது.