தமிழகத்தில் கோவைசரளா என்ற பெண்ணை காதலித்த இளைஞன், தற்போது அவரை திருமணம் செய்து கொள்ள முடியாது என்று கூறியதால், அவர் காவல்நிலைய வளாகத்தில் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம், ஆற்காடு அடுத்த வேப்பூர் நரிக்குறவர் பகுதியைச் சேர்ந்தவர் பூவரசன் (24). நாடோடி இனத்தைச் சேர்ந்தவரான இவரின் அண்ணனுக்கும், வாலாஜாபேட்டை நரிக்குறவர் பகுதியைச் சேர்ந்த கோவை சரளா (18) என்பவரின் அக்காளுக்கும் சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
இதையடுத்து அக்காவை பார்ப்பதற்காக பூவரசன் அடிக்கடி கோவைசரளா வீட்டிற்கு சென்று வந்ததால், இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
நண்பர்களாக பழகிய இவர்கள் நாளைடைவில் காதலித்து வந்துள்ளனர்.
இந்நிலையில் கோவைசரளா தன்னை திருமணம் செய்து கொள்ளும் படி பூவரசனிடம் கூறியுள்ளார்.
ஆனால் பூவரசன் உன்னை எல்லாம் திருமணம் செய்ய முடியாது என்று மறுத்துள்ளார். இதனால் கோவைசரளா தன்னை காதலித்து ஏமாற்றிய பூவரசனை தன்னுடன் சேர்த்து வைக்கும் படி அங்கிருக்கும் காவல்நிலையத்தில் நேற்று புகார் கொடுத்துள்ளார்.
பொலிசார் பூவரசனை அழைத்து விசாரித்த போது, என்னை கைது செய்தாலும் கூட, நான் அவளை திருமணம் செய்து கொள்ளமாட்டேன் என்று உறுதியாக கூறியுள்ளார்.
இதனால் மிகுந்த வேதனையில் இருந்த கோவைசரளா தான் மறைத்து வைத்திருந்த விஷ மருந்தைக் குடித்து, காவல் நிலைய வளாகத்திலேயே தற்கொலைக்கு முயன்றார்.
இதைக் கண்ட அங்கிருந்த பொலிசார் உடனடியாக 108 ஆம்புலன்சிற்கு தகவல் தெரிவித்ததால், அவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவருடைய உயிருக்கு எந்த ஒரு ஆபத்தும் இல்லை என மருத்துவர்கள் கூறியுள்ளனர். இந்த சம்பவத்திற்கு பொலிசார் அந்த பெண்ணை நீ திருமணம் செய்து கொள்ளவில்லை என்றால்
போக்ஸோ உள்ளிட்ட பெண்களுக்கு எதிரான வன்கொடுமை பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து கைது நடவடிக்கை எடுக்கப்படும் என்று காதலனிடம் பொலிசார் கூறியுள்ளனர்.