பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு சென்ற தோழியை பலவந்தப்படுத்திய தோழன்.!!

பெங்களூரில் உள்ள எச்.ஏ.எல் பகுதியில் வசித்து வருபவர் எம்.பி.ஏ பயிலும் இளம்பெண். இவருக்கு முகநூலின் மூலமாக ஆரிப் இன் என்ற குடியிருப்பில் வசிக்கும் நபர் ஒருவர் பழக்கமாகியுள்ளார். இவரது இல்லத்தில் ஆந்திர பிரதேசத்தை சார்ந்த ஆத்தியா என்பவர் இருந்துள்ளார்.

ஆரிப்பிற்கு பிறந்த நாள் என்று கூறியவுடன் இல்லத்திற்கு வந்து பிறந்த நாள் விழாவில் கலந்து கொள்வதாக தெரிவித்தவுடன்., பிறந்தநாள் விழாவை கொண்டாட சென்றுள்ளார்.

அந்த நேரத்தில் மூவரும் சேர்ந்து மது அருந்தியுள்ளனர். பின்னர் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் நடைபெற்று முடிந்துள்ளது. இதனால் களைப்படைந்த பெண் ஓய்வு எடுத்து கொண்டு இருந்தார்.

நண்பர்களுக்கு உணவு வாங்க ஆரிப் கடைக்கு செல்லவே., அந்த நேரத்தில் வீட்டில் இருந்த பெண்ணை ஆத்தியா மது போதையில் பலாத்காரம் செய்துள்ளார்.
இந்த நேரத்தில் இருவரும் மது போதையில் இருந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து ஆத்தியா இல்லத்திற்கு விரைந்ததும் நடந்ததை கூறிய பெண் கதறியளவே., சம்பவம் குறித்து காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்தார். இவரது புகாரை ஏற்ற காவல் துறையினர்., உடனடியாக இருவரையும் மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.