சசிகலா முன்கூட்டியே விடுதலையா.?

தமிழகத்தில் கடந்த 1991-௯௬ ஆண்டுகளில் ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க ஆட்சி நடைபெற்றபோது, ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, வி.என்.சுதாகரன் ஆகிய 4 பேரும் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்கு பதியப்பட்டது. பல ஆண்டுகளாக பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வந்தது.

கடந்த 2014-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் இந்த வழக்கின் இறுதி தீர்ப்பை வழங்கிய பெண்களிலோ நீதிமன்றம், ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 4 பேருக்கும் தலா 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கியது. மேலும், ஜெயலலிதாவுக்கு 100 கோடி ரூபாய், சசிகலா உள்பட மற்ற 3 பேருக்கும் தலா ரூ.10 கோடி அபராதமும் விதித்தது.

இதனையடுத்து ஜெயலலிதா தரப்பு, இந்த தீர்ப்பை எதிர்த்து கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கின் இறுதி தீர்ப்பில், ஜெயலலிதா உள்பட 4 பேரையும் விடுவித்து கர்நாடகா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த தீர்ப்பை எதிர்த்து தொடரப்பட்ட உச்சநீதிமன்றத்தில் தொடப்பட்ட வழக்கில், கடந்த 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14-ந்தேதி உடசேதமன்றம் இறுதி தீர்ப்பை வழங்கியது, அப்போது, ஜெயலலிதா மரணம் அடைந்த காரணத்தினால், சசிகலா, இளவரசி, சுதாகரன் மூவரும் குற்றவாளிகள் என்பதை உறுதி செய்த உச்சநீதிமன்றம், விசாரணை நீதிமன்றம் வழங்கிய 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையை உறுதி செய்து உத்தரவிட்டது.

இதன்காரணமாக, 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 15-ந்தேதி அன்று பெங்களூர் பரப்பன அக்ரஹாரம் சிறையில் சசிகலா, இளவரசி, சுதாகரன் மூவரும் அடைக்கப்பட்டனர். வரும் 15 ஆம் தேதியோடு இந்த மூவரின் சிறை வாழ்க்கை 2 ஆண்டுகளை நிறைவு அடைகிறது.

இந்நிலையில், சசிகலா உள்ளிட்ட மூவரும் சிறையில் இருந்து முன் கூட்டியே விடுதலை ஆக வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதாவது, கர்நாடகா மாநில சிறைத்துறை விதிகளின்படி நீண்ட கால மற்றும் குறுகிய கால தண்டனை பெற்றவர்கள் மூன்றில் இரண்டு பங்கு காலத்தை சிறையில் கழித்து விட்டால், அவர்களை முன் கூட்டியே விடுதலை செய்யலாம்.

இதனை பயன்படுத்தி, சசிகலா அவர்கள் பெங்களூர் சிறையில் இருந்து முன் கூட்டியே விடுதலையாக வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், இந்த வருட இறுதி அல்லது அடுத்த வருடம் பிப்ரவரி மாதம் சசிகலா சிறையில் இருந்து விடுதலையாக வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.