அவள் என்னுடைய மனைவி! 15 வயது சிறுமியை காட்டுக்குள் அழைத்து சென்று சீரழித்த இமாம்….

இந்தியாவின் கேரளாவில் 15 வயது சிறுமியை தனியாக காட்டுக்குள் அழைத்து சென்று பாலியல் ரீதியாக துன்புறுத்திய இமாம் மீது இதுவரையிலும் வழக்கு பதிவு செய்யப்படாதது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவின் தொலிக்கோடு மசூதியை சேர்ந்த இமாம் Shafiq Al Qassimi, 15 வயது பள்ளி மாணவியை தனியாக காட்டுக்குள் அழைத்து சென்று பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

அங்கிருந்த பெண் தொழிலாளர்கள் இமாமை கையும் களவுமாக பிடிக்க இது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

இதுதொடர்பில் பல்வேறு அமைப்புகளின் மூலம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டாலும், பொலிசில் இதுவரையிலும் வழக்கு ஏதும் பதிவு செய்யப்படவில்லை.

இந்நிலையில் 15 நிமிட ஆடியோ பதிவு வெளியாகியுள்ளது, அதில் பேசியுள்ள Badusha, குற்றம் நடந்ததாக கூறப்படும் இடத்திற்கு சென்று அங்குள்ள தொழிலாளர்களை சந்தித்து பேசியதாக தெரிவித்துள்ளார்.

அவர்கள் கூறியதாவது, தாங்கள் பணியாற்றிக் கொண்டிருக்கும் போது KL 18 6 114 என்ற பதிவெண் கொண்ட கார் சென்றதாகவும், அதில் 15 வயது மதிக்கத்தக்க சிறுமி இருந்தாகவும் தெரிவித்துள்ளனர்.

யார் என்று விசாரித்த போது, தன்னுடைய மனைவி என இமாம் கூற சந்தேகமடைந்த தொழிலாளர்கள் காரை பரிசோதித்த போது பள்ளியின் அடையாள அட்டையை பார்த்து அதிர்ச்சி அடைந்ததாக கூறியுள்ளனர்.

இதனை தொடர்ந்து இமாமை பின்தொடர்ந்த போது, தப்பித்து செல்ல முயன்ற வேளை அங்குள்ளவர்களால் துரத்திப் பிடிக்கப்பட்டுள்ளார்.

எனினும் இச்சம்பவம் பற்றி வெளியில் கூற விரும்பாத மாணவியின் குடும்பம், பொலிசில் புகார் அளிக்கவும் மறுத்துள்ளனர்.

இதனை தொடர்ந்து அகில இந்திய இமாம் கவுன்சிலில் இருந்து Shafiq Al Qassimi நீக்கப்பட்டுள்ளார்.

இதற்கு முன்னரும் இதுபோன்ற குற்றங்களில் Shafiq Al Qassimi ஈடுபட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.