பிரித்தானிய தீவு ஒன்றில் ஆறு வயது சிறுமியை பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கி கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள சிறுவன் ஒருவன் திடீரென தான் கொலை செய்யவில்லை என மறுத்துள்ளான்.
பிரித்தானியாவின் Isle of Bute தீவில் ஆறு வயது சிறுமி ஒருத்தியின் நிர்வாண உடல் கண்டெடுக்கப்பட்டது.
காணாமல் போனதாக அவளது உறவினர்கள் அந்த சிறுமியை தேடி வந்த நிலையில், அவள் சடலமாக கண்டெடுக்கப்பட்டது, அவளது குடும்பத்தாரிடையே கடும் அதிர்ச்சியையும் துக்கத்தையும் ஏற்படுத்தியது.
பின்னர் அவளது உடல் கிடைத்த இடத்திற்கு சற்று தொலைவில் அவளது உடைகளும் ஒரு கத்தியும் கிடைத்தன.
பிரேத பரிசோதனையில் அந்த சிறுமி பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டதும், கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டதும் தெரியவந்தது.
பின்னர் இச்சம்பவம் தொடர்பாக கிடைத்த கைரேகைகளின் அடிப்படையில் 16 வயது சிறுவன் ஒருவன் கைது செய்யப்பட்டான்.
வழக்கு தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது அந்த சிறுவன் திடீரென வாக்கு மூலத்தை மாற்றிக் கூறியுள்ளான்.
தான் அந்த சிறுமியைக் கொலை செய்யவில்லை என்றும், ஒரு குறிப்பிட்ட பெண்ணின் பெயரைச் சொல்லி அவர்தான் அந்த சிறுமியின் உயிரிழப்புக்கு காரணம் என்றும் அவன் கூறியுள்ளது வழக்கில் திடீர் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.