தெருவில் விளையாடிக்கொண்டிருந்த சிறுமிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி!

ரஸ்யாவில் 52 வயது நபரின் கைகள் துண்டாக கிடந்த சம்பவத்தில், 80 வயது மூதாட்டி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ரஷ்யாவில் தெருவோரத்தில் விளையாடி கொண்டிருந்த சிறுமி, தனியாக துண்டிக்கப்பட்ட கை ஒன்று கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார்.

இந்த சம்பவ அறிந்து மோப்ப நாய்களுடன் வந்த பொலிஸார், ஆங்காங்கே பல இடங்களில் கிடந்த அந்த நபரின் உடல் பாகங்களை கண்டறிந்தனர்.

பின்னர் அவருடைய கைரேகையை வைத்து ஆய்வு மேற்கொண்டதில், உக்ரைன் நாட்டை சேர்ந்த 52 வயது குடியிருப்பாளர் என்பது தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த பொலிஸார் தீவிர விசாரணை மேற்கொண்ட போது, சந்தேகத்தின் பேரில் 80 வயது மூதாட்டியின் வீட்டில் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது கொலை செய்யப்பட்டவரின் குடல்கள் உட்பட பல பாகங்கள் வீட்டில் குளிர்சாதன பெட்டியில் இருப்பதை பொலிஸார் கண்டறிந்துள்ளனர்.

பின்னர் அவரிடம் விசாரணை மேற்கொண்ட போது, நான் எந்த தவறும் செய்யவில்லை என அந்த மூதாட்டியின் சமாளித்துள்ளார்.

இதற்கிடையில் மற்றொரு தடையமாக சில வருடங்களுக்கு முன் காணாமல் போன் பெண் ஒருவரின் பாஸ்போர்ட் அவருடைய வீட்டில் இருந்து கண்டெடுக்கப்பட்டது.

ஆனால் அந்த பாட்டி தான் இத்தனை கொலைகளையும் செய்தாரா என்பதை உறுதி செய்யமுடியாத பொலிஸார், கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

அங்கு வழக்கினை விசாரித்த நீதிபதி, ஏற்கனவே அங்கு மாயமான இளைஞரும் இந்த வழக்கில் சம்மந்தப்பட்டுள்ளாரா என்பதை விசாரிக்க கூறியதோடு, குற்றம் சுமத்தப்பட்ட வயதான பெண்மணியை 3 மாதம் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.