முல்லைத்தீவு விசுவமடு இளங்கோபுரம் பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் வயோதிபர் ஒருவரின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளது.
விசுவமடு இளங்கோபுரத்தை சேர்ந்த கே. சுந்தரம் வயது 54 என்பவரே இவ்வாறு தூக்கில் தொங்கி உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
குறித்த வயோதிபரின் சடலம் மரண விசாரனை அதிகாரி முன்னிலையில் இன்று மீட்கப்பட்டு மாஞ்சோலை வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.