4 குழந்தைகள் பெற்றுக்கொண்டால், வருமான வரி செலுத்த தேவையில்லை! பிரதமர் அதிரடி…

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஹங்கேரியில் குழந்தை பிறப்பு விகிதம் வெகுவாக குறைந்து கொண்டுவருகிறது. இதனால் மக்கள் தொகை எண்ணிக்கை பெரும் பின்னடைவை சந்தித்துவருகிறது. அங்கு ஆண்டுக்கு 32,000 என்ற அளவுக்கு மக்கள்தொகையில் வீழ்ச்சியை சந்தித்துவருகிறது.

இதனால் நாட்டில் குழந்தைகள் பிறப்பை அதிகரிக்கும் வகையில் பிரதமர் விக்டர் ஆர்பன் தலைமையிலான அரசு பல்வேறு அதிரடி திட்டங்களை அறிவித்து வருகிறது. அந்தவகையில் 4 அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகளை பெறும் பெண்களுக்கு, வருமானவரி செலுத்துவதில் இருந்து வாழ்நாள் முழுவதும் விலக்கு அளிக்கப்படுவதாக பிரதமர் விக்டர் ஆர்பன் அதிரடியாக அறிவித்துள்ளார்.

மேலும், நாட்டில் சரிந்துவரும் மக்கள்தொகையை சீர்செய்யும் விதமாக, இளம் தம்பதியருக்கு 36 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் வட்டி இல்லா கடனாக வழங்க உள்ளனர். அந்த தம்பதிக்கு 3 குழந்தைகள் பிறந்த பிறகு அந்த கடன் தள்ளுபடி செய்யப்படும் என்றும் பிரதமர் விக்டர் ஆர்பன் அறிவித்துள்ளார்.