பஞ்சாமிர்தம் செய்யும் முறை மற்றும் அதன் பயன்களை காணலாம்.
தேவையான பொருட்கள்:
ஆப்பிள்,
மாதுளை(சிறிதளவு),
வாழைப்பழம் (தேவையான அளவு),
சாத்துக்குடி,
திராட்சை,
பேரிச்சம் பழம்,
பச்சை கற்பூரம்,
தேன்,
நாட்டு சர்க்கரை,
ஏலக்காய் தூள்,
நெய்.
செய்முறை:
பழங்கள் அனைத்தையும் சிறிய துண்டுகளாக நறுக்கி அகன்ற பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும். அதனுடன் ஒரு சிட்டிகை பச்சை கற்பூரம், ஏலக்காய் பொடி, தேன், நெய் கலந்து கிளறவும். பின்னர் அதனுடன் நாட்டு சர்க்கரை சேர்த்து அரை மணி நேரம் ஊறவிடவும். ஊட்டச்சத்து உணவாக விளங்கும் இந்த பஞ்சாமிர்தத்தை சிறியோர் முதல் அனைவரும் உண்ணலாம்.
பலன்கள்:
ஐந்து வகையான கனிகளை பயன்படுத்தி தயாரிக்கப்படும் பஞ்சாமிர்தத்தை, தேன் சேர்த்து நெடுநாள் கெடாமல் பாதுகாக்கலாம். பல வகை கனிகளை ஒன்று சேர்க்கும் போது, அதனுடன் சற்று பச்சை கற்பூரம் சேர்ப்பதால் சீதள நோய்கள் வராமல் காப்பதுடன், தொண்டையை ஊறு செய்யாத வண்ணம் தடுக்கிறது. இது உடலுக்கு சிறந்த சக்தி அளிக்கிறது.