கணவருடன் விவாகரத்து! திருமண உடையை விற்கும் இளம்பெண்…

பிரித்தானியாவை சேர்ந்த இளம் பெண் கணவரிடம் இருந்து விவாகரத்து பெறவுள்ள நிலையில் அதற்கான செலவை சமாளிக்க தனது திருமண உடையை விற்பனை செய்ய விளம்பரம் கொடுத்துள்ளார்.

மான்செஸ்டரை சேர்ந்த பெண், அதிக பொய்களை கூறி தன்னை ஏமாற்றிய கணவரிடம் இருந்து விவாகரத்து பெற முடிவெடுத்தார்.

இந்நிலையில் விவாகரத்து செலவை சமாளிக்க தனது திருமண ஆடையை விற்கமுடிவு செய்து அது குறித்து பேஸ்புக்கில் அவர் பதிவிட்டுள்ளார்.

அதில், இந்த உடையை தவறுதலாக நான் கடந்த 2017-ல் சோதனை செய்யும் நோக்கில் ஒருமுறை மட்டுமே அணிந்தேன்.

உடையின் விலை £899, ஆனால் £450 என்ற அளவில் யாராவது இதை வாங்கி கொள்ளலாம்.

இந்த அருமையான உடையை என் வாழ்க்கையிலிருந்து யாராவது எடுத்துவிடுங்கள்.

ஆடை 18 என்ற அளவில் உள்ளது, இதில் வேறு எந்த மாற்றங்களும் செய்ய தேவையில்லை… என் வாழ்க்கையை போல என பதிவிட்டுள்ளார்.

பெண்ணின் பதிவு வைரலாக பரவி வரும் நிலையில் உடையை யாராவது வாங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது