கொல்கத்தாவில் தனது அண்ணன் மனைவி மீது ஆசிட் ஊற்றிய மைத்துனன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
27 வயதான அன்சாரி என்பவர் தனது அண்ணன் மனைவியை பார்த்து நீ ஒரு விபச்சாரி என வசைபாடியுள்ளார்.
அண்ணி என்றும்கூட பார்க்காமல் தொடர்ந்து மோசமான வார்த்தைகளால் வசைபாடியுள்ளார். இதனை எதிர்த்து குறித்த பெண் அவ்வப்போது சண்டை போட்டுள்ளார்.
இந்நிலையில் நேற்று சண்டை முற்றிய நிலையில், ஆசிட்டை எடுத்து அன்சாரி தனது அண்ணின் மீது ஊற்றியுள்ளார்.
இதில் உடல் வெந்துபோன பெண் மருத்துவமனையில் உயிருக்காக போராடி வருகிறார், 90 சதவீதம் தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக தனது தம்பியின் மீது அண்ணன் புகார் அளித்ததையடுத்து அன்சாரி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.