கேரள மாநிலம், திருவனந்தபுரம் அருகே உள்ள, நெடுமங்காடு பகுதியைச் சேர்ந்தவர் ஷெபீக் அல் காசினி (வயது 38). இவர் தொழிக்கோடு முஸ்லீம் பள்ளிவாசலில் இமாம் ஆக இருந்தார்.
இவர் 15 வயது மதிக்கத்தக்க பள்ளி மாணவியை, ஆசை வார்த்தை கூறி தன் காரில் ஏற்றிச் சென்றுள்ளார். பின்னர் அந்த மாணவியை, பேப்பாறை வனப் பகுதிக்குள் அழைத்துச் சென்று, அந்த மாணவியை மிரட்டி பலாத்காரம் செய்துள்ளார்.
பின், அந்த சிறுமியிடம், யாரிடமும் சொல்லக் கூடாது, என்று மிரட்டி, காருக்கு திருப்பி அழைத்துக் கொண்டு சென்றார். வனத்தில் தனியாக இருந்த காரைப் பார்த்து, சந்தேகம் அடைந்த சிலர், அந்தக் காரில் ஏற வந்த இமாமிடம் விசாரித்தனர்.
அப்போது அவர், அந்த மாணவியைக் காட்டி, இது என் மனைவி, என்று கூறி உள்ளார். ஆனால், அந்த சிறுமி, பள்ளி சீருடையில் இருந்ததைச் சுட்டிக் காட்டிய அவர்கள், அந்த சிறுமியிடம் விசாரித்தனர்.
அப்போது அந்த சிறுமி அழுது கொண்டே, அவர் தன்னைப் பலாத்காரம் செய்ததைப் பற்றிக் கூறி உள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள், இத் தகவலை கொழிக்கோடு ஜமா அத் நிர்வாகிகளிடம் கூறினர்.
இதனைத் தொடர்ந்து, பள்ளிவாசல் நிர்வாகிகள், இமாம் பதவியிலிருந்து அவரை நீக்கினார்கள். மேலும், அந்த பள்ளிவாசலின் தலைவர், இது குறித்து போலீசில் புகார் செய்தார்.