சேலம் மாவட்டத்தில் இருக்கும் தாரமங்கலம் அருகேயுள்ள மேட்டுப்பட்டி பகுதியை சார்ந்த லாரி ஓட்டுநர் திருமணம் முடிந்து தனது மனைவியுடன் வசித்து வந்தார். அதே பகுதியை சார்ந்த கட்டிட மேற்பார்வையாளர் ரவி (வயது 28).
ரவிக்கும் லாரி ஓட்டுனரின் மனைவிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கத்தை தவறான வழியில் உபயோகம் செய்ய நினைத்த ரவி., அந்த பெண்ணிடம் ஆசை வார்த்தைகளை கூறி தனது லீலைகளை காட்டியுள்ளார்.
இவரது ஆசைவார்த்தையில் விழுந்த பெண்ணின் பழக்கம்., இருவருக்கும் இடையே நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இதனால் இவர்கள் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர்.
இந்த பழக்கத்தை அறிந்த பெண்ணின் கணவர் தனது மனைவியிடம்., முறையற்ற பழக்கம் குறித்து கண்டித்துள்ளார். இதனை கேட்டு மனம் திருந்திய பெண்., வெளியே செல்லாமல் இருந்து வந்துள்ளார்.
தனது கள்ளக்காதலி வெளியே வராமல் வீட்டிலேயே இருந்ததால்., கள்ளக்காதலியை காண இயலாமல் ரவி தவித்து வந்துள்ளார். இந்நிலையில்., சம்பவத்தன்று கள்ளகாதலியின் இல்லத்திற்கு எதிரே சென்ற அவர்., தனது கள்ளக்காதலுக்கு சமிக்கை வழங்கியுள்ளார்.
இதனை கண்ட பெண்ணின் கணவர் ரவியிடம் சென்று முறையிடவே., நான் அப்படித்தான் வருவேன்., உனது மனைவியை மரியாதையாக இருக்க கூறு என்று கூறியுள்ளார். இதனை கேட்டு ஆத்திரம் அடைந்த பெண்ணின் கணவருக்கும் ரவிக்கும் இடையே வாக்கு வாதம் முற்றி கைகலப்பில் சென்று இருவரும் நடு வீதியில் கட்டிஉருண்டு சண்டையிட்டுக்கொண்டனர்.
இதனை கண்ட ஊர் பொதுமக்கள் திரளவே., அந்த இடமே நிமிடத்தில் போர்க்களமாக மாறியது. இதனையடுத்து இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டதில் காயமடைந்தனர். இவர்களை பிரித்து விட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர்., வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவமானது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.