48 ஆண்டுகால காதல் மனைவிக்கு கோயில் கட்டிய கணவன்…

புதுக்கோட்டை மாவட்டத்தில் 48 ஆண்டுகால காதல் மனைவிக்கு கோயில் கட்டி தினமும் வணங்கி வருகிறார் சுப்பையா.

புதுக்கோட்டை உசிலங்குளம் பகுதியைச் சேர்ந்த சுப்பையா என்பவர் பிஎஸ்என்எல் மேற்பார்வையாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

செண்பகவல்லை என்பவரை சுப்பையா கடந்த 1958-ம் ஆண்டு காதலித்து, இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார்.

கடந்த 2006-ம் ஆண்டு செண்பகவல்லி உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். பிள்ளைகளையும் திருமணம் செய்துவைத்துவிட்டதால் தனிமையில் வசித்து வந்த சுப்பையாவுக்கு மனைவி இல்லாத தனிமை வாட்டியது.

இதை தொடர்ந்து 3 லட்ச ரூபாய் செலவில் தனது மனைவி செண்பகவல்லிக்கு 3.5 அடியில் ஐம்பொனில் திருவுருவ சிலையை செய்து தனது வீட்டில் வைத்துள்ளார்.

தினமும் தனது மனைவியை வழிபட்டு, அவர் இல்லாத குறையை போக்கியுள்ளார். காதல் மனைவிக்கு கோயில் கட்டிய சுப்பையா இந்த உலகில் வாழ்ந்து வரும் ஒரு ஷாஜகான்.