62 வயதில் மருமகள் மீது கொண்ட மோகத்தால் கண்டம் துண்டமாக வெட்டி வீசிய தந்தை!

இந்தியாவில் மருமகள் மீது ஆசைப்பட்டு, மகனை கொடூரமாக கொலை செய்த தந்தையின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பஞ்சாப் மாநிலத்தில் இருக்கும் Dabri Khana கிராமத்தை சேர்ந்தவர் Rajwinder Singh. இவருக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், கடந்த செவ்வாகிழமை கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

இது குறித்து Rajwinder Singh சகோதரர் Gurcharan Singh இது குறித்து பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டதால், விரைந்து வந்த பொலிசார் அது குறித்து மேற்கொண்ட விசாரணையில் இந்த கொலையை செய்ததது Rajwinder Singh தான் என்பது தெரியவந்துள்ளது.

அதன் பின் அவரிடம் பொலிசார் மேற்கொண்ட விசாரணையில் சில திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Rajwinder Singh(40)-வுக்கும் Jasvir Kaur என்ற பெண்ணுக்கும் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தை உள்ளது.

இந்நிலையில் Rajwinder Singh-ன் தந்தையான Chhota Singh-க்கு மருமகளான Jasvir Kaur-மீது ஒரு வித ஆசை இருந்துள்ளது.

இதனால் அவரை எப்படியாவது திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று நினைத்துள்ளார். ஆனால் இது மகனுக்கு தெரியவந்ததால், இருவருக்கும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து மகன் உயிரோடு இருந்தால் நடக்காது என்று எண்ணிய Chhota Singh மகனை கொலை செய்ய முடிவு செய்துள்ளார். அதன் படி சம்பவ தினத்தன்று தூங்கிக் கொண்டிருந்த மகனை கூர்மையான ஆயுதத்தால் தாக்கி அவரை கொடூரமாக கொலை செய்து துண்டம் துண்டமாக வெட்டி பிளாஸ்டிக் பை ஒன்றில் போட்டு, அங்கிருக்கும் கால்வாயில் வீசியுள்ளார்.

மறுநாள் காலை சகோதரன் Gurcharan Singh கொடுத்த தகவலின் பேரில் Chhota Singh சிக்கிக் கொண்டார் என்று பொலிசார் கூறியுள்ளனர்.