இன்று “வாலெண்டைன்ஸ் டே” எனப்படும், காதலர் தினம்.
வாலெண்டைன்ஸ் என்பவர், காதலர்கள், தங்கள் காதலை வெளிப் படுத்துவதற்காகவும், காதலிக்குப் பிடித்த மாதிரி வாசகங்கள் அடங்கிய வாழ்த்து அட்டை ஒன்றை தயாரித்தார்.
அவரே, இது இத்தனை பிரபலமாகும், என்று நினைத்துக் கூடப் பார்த்திருக்க மாட்டார்.
அந்த வாழ்த்து அட்டையும், ஒரு ரோஜாப் பூவும் தான், தங்கள் காதலை வெளிப்படுத்தும் அடையாளமாகக் காதலர்கள் நினைத்தனர்.
அவரது நினைவாக, பிப்ரவரி 14-ஆம் தேதி, வாலெண்டைன்ஸ் டே, காதலர் தினமானது. இந்த தினம், உலகம் முழுவதும் கொண்டாடப் படுகிறது.
இதே வேளையில், மெக்சிகோ நாட்டில், ஏப்ரல் 13 முதல் ஏப்ரல் 16 வரை, ஆணுறை தினமாகக் கொண்டாடப் படுகிறது. பல ஆணுறை தயாரிக்கும் நிறுவனங்கள், இந்த நாட்களில், புதிதாக தாங்கள் தயாரித்துள்ள நவீன ஆணுறையை, இலவசமாகவே வழங்கி வருகிறது.
தற்போது, மெக்சிகோ நாட்டில், இந்த தினம், திருவிழாவாக கடை பிடிக்கப்பட்டு வருகிறது.
இதற்காக, பிப்ரவரி 13 முதல் 16 வரையில், மக்கள் அதிகம் கூடும், பூங்காக்கள், பேக்கரிகள், உணவு விடுதிகள், கடற்கரை, போன்ற இடங்களில், இந்த ஆணுறையில், காற்றை ஊதி பலுான் போல பறக்க விடுகின்றனர்.
இதை வாங்குவதற்காக ஆண்கள் போட்டி போட்டுக் கொண்டு முந்தி அடித்து வரிசையில் நிற்கின்றனர். ஆண்கள் தான் இப்படி என்றால், பெண்களும், இந்த ஆணுறைகளை வாங்குவதற்காக முண்டியடித்துக் கொண்டு நிற்கின்றனர்.