காதலியுடன் லாட்ஜில் இருந்த காதலன் திடீர் மரணம்!!

திருவாரூர் நன்னிலம் அருகே உள்ள, ஆனைகுப்பம் கள்ளிடைமேடு பகுதியை சேர்ந்த கலியபெருமாள் என்பவருடைய மகன் சுதாகர் (30) சென்னையில் கொத்தனாராக வேலை பார்த்து வந்துள்ளார்.

அதே கள்ளிடைமேடு பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். இவர்கள் இருவரும் வேளாங்கண்ணிக்கு சுற்றுலாவிற்கு சென்றுள்ளனர். அங்கு ஒரு லாட்ஜில் அறை எடுத்து தங்கியிருந்தனர்.

இந்நிலையில், சுதாகருக்கு ஒரு அழைப்பு வந்துள்ளது. இதனால் அந்த அறையை விட்டு வெளியே வந்து சுதாகர் செல்போனில் பேசி விட்டு மீண்டும் அவர்கள் தங்கியிருந்த அறைக்கு வந்துள்ளார். அப்போது அவருடைய காதலி செல்போனில் பேசியது யார்? என கேட்டு உள்ளார்.

இதனால் இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது. இதனைத் தொடர்ந்து அந்த அறையில் இருந்த குளியலறைக்கு சுதாகர் சென்று உள்ளார். வெகுநேரமாகியும் அவர் வெளியில் வராததால் அவரது காதலி குளியல் அறையை திறந்து பார்த்தபோது, சுதாகர் தூக்கில் தொங்கியிருந்துள்ளார்.

இதனை கண்ட அவரது காதலி அதிர்ச்சியில் பேச்சற்று நின்று, பின்னர் கத்தி கூச்சல் போட்டுள்ளார். விடுதிப் பணியாளர்கள் ஓடி வந்து சுதாகரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அவரை பரிசோதித்த மருத்துவர்.

அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளார் பின்னர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அந்த காதலியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.