முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்.!

இன்றைக்கு மட்டுமல்ல என்றுமே, ஒவ்வொரு குழந்தைக்கும் தனது தந்தை தான் முன்னுதாரணமாக இருக்கின்றனர். ஒரு குடும்பத்தில் எந்தவொரு விஷயமும் குடும்பத்தின், தலைவன் மற்றும் தலைவியை பொறுத்தே அமையும்,

இதில் ஒருவர் பொறுப்பற்று இருந்தாலும் குழந்தைகளின் எதிர்காலம் குழப்பத்தை தருவதாய் அமைந்து விடுகின்றது. நமது தமிழ் சினிமாவிலேயே நிறைய சமூக விரோதிகளின் உருவாக்கத்திற்கு, பிள்ளையார் சுழி போடுவது தந்தை அல்லது தாயக தான் இருக்கின்றனர்.

தாயின் நடத்தையில் குறை இருந்தாலோ? அல்லது தந்தை பொறுப்பற்று ஊதாரியாக இருந்தாலோ? இதனால் அதிகம் பாதிக்கப்படுவது குழந்தைகள் தான். உளவியல் ரீதியாக இதுபோன்ற விஷயங்களால் சிறுவயதிலேயே மிகவும் பாதிக்கப்பட்டு விடுகிறனனர்.

இதையெல்லாம் கடந்து, எந்த பெற்றோராலும், நுறு சதவீதம் சரியான தாய் தந்தையாக நடந்து கொள்ள முடியாது தான், எல்லோர் குடும்பத்திலும் குறைகள் இருக்கத்தான் செய்கின்றன. இருப்பினும் பெற்றோர் தான் எடுக்கும் ஒவ்வொரு முடிவிலும் குழந்தைகளின் எதிர்காலத்தையும், அவர்களது மனநிலையையும் அறிந்து இருத்தல் அவசியம்.

தந்தையின் அரவணைப்பில் குழந்தைகளுக்கு கிடைக்கும் பாதுகாப்பும், அன்பும் வேறெதற்கும் ஈடாகாது என்பது குறிப்பிடத்தக்கது.