கண்மூடிய மனைவி.! இதயத்தை தானமாக கொடுத்து உயிரை காத்த கணவன்.!!

கண்மூடிய மனைவி.! காதலர் தினத்திற்காக காத்திருந்த கணவன்.!! இதயத்தை தானமாக கொடுத்து உயிரை காத்த நெகிழ்ச்சி சம்பவம்.!!

வேலூர்: கண்மூடிய மனைவி.! காதலர் தினத்திற்காக காத்திருந்த கணவன்.!! இதயத்தை தானமாக கொடுத்து உயிரை காத்த நெகிழ்ச்சி சம்பவம்.!!

உலகம் முழுவதும் இன்று காதலர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. காதலர்கள் பலரும் இந்த நாளை மகிழ்ச்சியாகவும், ஆடல் பாடல் என்றும் கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் தமிழகத்தில் ஒரு உருக்கமான சம்பவம் நடந்துள்ளது. கணவர் ஒருவர் மூளைச்சாவு அடைந்த தனது மனைவியின் இதயத்தை காதலர் தினமான இன்று தானமாக வழங்கியுள்ளார். தனது மனைவியின் இதயம் உள்ளிட்ட 5 உறுப்புகளை தானமாக வழங்கியுள்ளார் அந்த கணவர்.

வேலூறில் வசித்து வரும் கவுதம்ராஜ் என்பவர், கடலூர் மாவட்டம், புவனகிரி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர். இவர் பெங்களூறில் உள்ள ஒரு ஐ.டி. நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.

இவருக்கு கடந்த ஆண்டு மே மாதம் கோகிலா திருமணம் நடைபெற்றது. கோகிலா கர்ப்பமாக இருந்து வந்த நிலையில், அவரை பரிசோதனை மருத்துவர்கள், அவரின் உடலில் ரத்த அணுக்கள் குறைவாக உள்ளது என்று தெரிவித்துள்ளனர்.

இதனால், வேலூரில் உள்ள சி.எம்.சி. மருத்துவமனையில் கோகிலாசிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பின் அறுவை சிகிச்சை மூலம் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு குழந்தை வெளியே எடுக்கப்பட்டது.

ஆனால் கோகிலாவின் உடல் நிலை முன்னேற்றம் அடையாமல், மூளைச்சாவு ஏற்பட்டு உயிரிழந்தார். கோகிலாவின் இறப்பு அறிந்த கணவர் கவுதம்ராஜ் உட்பட அனைத்து உறவினர்களும் சோகத்தில் ஆழ்ந்தனர்.

இந்த நிலையிலும் கணவர் கவுதம்ராஜ் ஒரு தீர்க்கமான முடிவை எடுத்தார், உடனடியாக மருத்துவர்களிடம் தனது மனைவியின் உடல் உறுப்புகளை தானம் செய்ய உள்ளதாகவும் இதனை வரும் 14 ஆம் தேதி காதலர் தினத்தன்று வழங்க உள்ளதாகவும் கூறினார்.

இதனையடுத்து, கோகிலா அவர்களின் உடல் உறுப்புகளை சட்டத்திற்கு உட்பட்டு அதனை அறுவை சிகிச்சை மூலம் எடுக்கப்பட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு பொருத்துவதற்கான அறுவை சிகிச்சை வேலூரில் நடைபெற்று வருகிறது. இதன் மூலம் 5 உயிர்கள் காக்கப்படும். மனைவி இறந்த போதும் உடல் உறுப்பு தானத்துக்கு முன் வந்த கணவர் கவுதம்ராஜை பலரும் பாராட்டி வருகின்றனர்.