பிப்ரவரி 14 இன்று உலகம் முழுவதும் காதலர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த காதலர் தினத்தில், காதலர்கள் தங்களது காதலை வெளிப்படுத்தும் விதமாக பல்வேறு பரிசு பொருட்களை வழங்கி தங்களது துணையை மகிழ்ச்சி படுத்தி கொண்டிருக்கின்றனர்.
உல்லாச இடங்களுக்கு செல்வது, பல்வேறு விதமான பொருட்களை வாங்கி மகிழ்வது, திரையரங்குகள் செல்வது, ரோஜாக்கள் கொடுத்து காதலை தெரிவிப்பது, சாக்குலேட்டுகள் வழங்குவது என பல்வேறு விதமாக கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில், திருவள்ளூர் கவரப்பேட்டையில் பள்ளி மாணவி ஒருவரை மின்சார ரயிலில் இருந்து கீழே தள்ளி வாலிபர் ஒருவர் கொலை செய்துள்ளார். ரயிலில் பயணம் செய்கையில் மாணவியை கீழே தள்ளி விட்டுள்ளார்.
கீழே விழுந்த மாணவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளர். உடனிருந்தவர்கள் அந்த மர்ம நபரை பிடித்து அடித்து போலீசில் ஒப்படைத்துள்ளனர். காதலர் தினமான இன்று ஒரு தலை காதலால் ஏற்பட்ட கொலையா என போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.