மேலூரில் உள்ள நாவினிப்பட்டியைச் சேர்ந்த வெள்ளைக்கண் என்பவரது மகள் திருவரம்போற்றி(38). இவருக்கும், அதே பகுதியில் வசித்து வந்த சுந்தர்(42) என்பவருக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்தது.
இந்நிலையில் சுந்தர் கள்ளக்காதலி திருவரம்போற்றியிடம், “உனக்கு பெரிய நிறுவனத்தில் வேலை வாங்கித்தருகிறேன். இதற்கு ரூ.4லட்சத்திற்கு மேல் செலவாகும்“ என்று ஆசை வார்த்தைகள் கூறி கேட்டுள்ளார்.
இதற்கு சுந்தரின் தாய் பஞ்சவர்ணம், சகோதரிகள் ரேணுகா, ரேவதி, பேச்சியம்மாள் மற்றும் இந்திரா ஆகிய 5 பேரும் உடந்தையாக இருந்துள்ளனர்.
சுந்தரின் பேச்சை நம்பிய திருவரம்போற்றி, அவரிடம் ரூ.4.20 லட்சத்தைக் கொடுத்துள்ளார். ஆனால் சுந்தர் சொல்லியபடி வேலையும் வாங்கித்தரவில்லை, பணத்தையும் திருப்பித்தர மறுத்து உள்ளார்.
இது தொடர்பாக திருவரம்போற்றி மேலூரில் உள்ள காவல் துறையில் புகார் கொடுத்தார். இன்ஸ்பெக்டர் ஜேசு வழக்குப்பதிவு செய்து சம்மந்தப்பட்ட 6 பேரிடமும் விசாரணை நடத்தி வருகிறார்.