காதலில் சிக்காத சிங்கிள்ஸ்களை உற்சாகப்படுத்த அதிரடி சலுகை!

பிப்ரவரி 14 இன்று உலகம் முழுவதும் காதலர் தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் நாடு முழுவதும் உணவகங்கள் போன்ற பல பகுதிகளிலும் காதல் ஜோடிகளுக்காக வித்தியாசமான சலுகைகளுடன் கூடிய நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் காதலில் வசப்படாமல் சிங்கிள்ஸாக இருக்கும் இளைஞர்கள் மற்றும் இளம்பெண்களை உற்சாகப்படுத்தும் வகையில் அகமதாபாத்தில் உள்ள கடை ஒன்றில் சலுகையுடன் கூடிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அதாவது அகமதாபாத்தில் உள்ள வஸ்திராப்பூர் பகுதியில் எம்.பி.ஏ ச்சாய் வாலா என்ற கடை ஒன்று இயங்கி வருகிறது. இதனை பிரபுல் பில்லோர் என்ற எம்.பி.ஏ படிப்பை பாதியிலேயே நிறுத்திய பட்டதாரி ஒருவர் நடத்தி வருகிறார்.இங்கு 35 வகையான டீ மற்றும் வகைவகையான ஸ்நாக்ஸ் உணவு பொருட்கள் கிடைக்கும்.

இந்நிலையில் அந்த கடையில் காதலர் தினத்தை முன்னிட்டு காதலில் சிக்காத, ஒதுங்கி வாழும் சிங்கிள்ஸ்களும் காதலர் தினத்தை கொண்டாட புதிய சலுகையை அறிவிக்கபட்டுள்ளது.அதாவது காதலர் தினத்தன்று இரவு 7 மணி முதல் 10 மணி வரை சிங்கிள்ஸ்க்கு இலவச டீ வழங்கப்படும் என்ற தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் சிங்கிள்ஸ் பெரும் உற்சாகம் அடைந்துள்ளனர்.