இந்தியாவின் வடக்கு பகுதியான ஜம்முகாஷ்மீர் பகுதியை கைப்பற்றுவதற்காக பிரிவினை தீவிரவாதிகள் தொடர்ந்து பல்வேறு தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இதன் காரணமாக அந்த பகுதியில் எந்த நேரமும் இந்திய இராணுவத்தினர் விழிப்புடன் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருவது வழக்கம்.
இந்நிலையில் அவந்திபோரா பகுதியில் 54 பட்டாலியன் படை பிரிவின் 2500 வீரர்கள் 70 வாகனங்களில் சென்ற கான்வேயில் இரண்டு பஸ்சில் மற்றொரு வாகனம் மோதி வெடிக்கப்பட்டுள்ளது. ஒரு வாகனம் முழுதும் வெடிமருந்து நிரப்பி எதிரில் வரும் வாகனத்தை மோதச் செய்து சிதறடிக்கும் உத்தி பயன்படுத்தப்பட்டுள்ளது. Vehicle borne improvised explosive device என இந்த தாக்குதல் முறை அழைக்கப்படுகிறது. இந்தியாவில் இந்த மாதிரியான தாக்குதல் இது தான் முதன் முறை என கூறப்படுகிறது.
ஸ்கார்பியோ போன்ற காரில் வைத்து வெடிமருந்து கடத்தி வந்து நன்கு தொழில்நுட்பம் தெரிந்தவர்கள் உதவியுடன், இராணுவத் தரத்திலான வெடிமருந்தை கடத்தி வந்துள்ளனர். ஜெய்ஸ் இ முகமது என்ற பாகிஸ்தான் அமைப்பு உள்ளூர் பயங்கரவாதிகள உதவியுடன் நடத்தியுள்ளது தெரிய வந்துள்ளது. பயங்கரவாதிகளின் திடீர் தாக்குதல் நடத்தியதில் சம்பவ இடத்திலேயே 18 வீரர்கள் வீரமரணம் அடைந்து உள்ளனர் என்ற செய்தி நாட்டையே உலுக்கியுள்ளது.
44 வீரர்கள் காயம்பட்டு உள்ளதாகவும் தகவல்கள் வெளியான நிலையில், தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வீரர்களில் மேலும் இருவர் உயிரிழந்து பலி எண்ணிக்கை 20 ஆக உயர்ந்து வீர மரணம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியது. காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதலில் வீரமரணம் அடைந்த சி.ஆர்.பி.எப். வீரர்களின் எண்ணிக்கை 39 ஆக உயர்வடைந்து உள்ளது என்ற அதிர்ச்சி தகவல் வந்துள்ளது. மேலும் உயிரிழப்பு அதிகரிக்கும் எனவும் அஞ்சப்படுகிறது.