இந்த உணவுகளை தொடாதீர்கள் கர்ப்பமாக இருக்கும் பொழுது!

ஆணுக்கும் பெண்ணுக்கும் மனித வாழ்வில் கிடைக்கும் உச்சகட்ட மகிழ்வு என்றால், அது தனக்கு பிறக்க போகும் குழந்தை தான். தற்போதைய காலகட்டத்தில் குழந்தைப்பேறு என்பது கடவுள் கொடுக்கும் வரமாகும். எனவே கர்ப்பக் காலத்தில் உள்ள பெண்கள் தனது வயிற்றில் இருக்கும் குழந்தையை ஆரோக்கியத்துடன் பராமரிப்பதும் பாதுகாப்பதும் மிகவும் அவசியமாகும்.

பெண் கர்ப்பிணியாக இருக்கும்போது உணவுக்கட்டுப்பாடு என்பது மிகவும் முக்கியமான விஷயமாகும். பெண் கர்ப்பமாக இருப்பதை உறுதி செய்த பின் ஒருசில பழங்கள் மற்றும் காய்கறிகளை தவிர்க்க வேண்டும்.

கர்ப்பமாக அறவே தவிர்க்க வேண்டிய உணவுகள்:

1.பப்பாளி
2.அன்னாசிப்பழம்
3.திராட்சை
4.கத்திரிக்காய்
5.வெந்தயம்
6.பெருஞ்சீரகம்
7.எள் விதைகள்
8.பச்சை முட்டை

கர்ப்பமாக இருக்கும் போது பாப்பாளிப் பழம் சாப்பிடவே கூடாது. கர்ப்பம் அடைந்த மூன்று மாதத்திற்குள்ளும், கடைசி மாதத்திலும் பப்பாளியை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். அன்னாசிப்பழத்தில் அதிகப்படியான ப்ரோமிலைன் உள்ளது. இவை கர்ப்பிணிகளுக்கு கரு கலைவதை உண்டாக்கும்.

கர்ப்பிணிகள் திராட்சை பழத்தை சாப்பிடக் கூடாது. ஏனெனில் அதில் ஏராளமான ரசாயனங்கள் தெளிக்கப்பட்டிருக்கும். கத்திரிக்காயில் உள்ள சத்துக்கள், மாதவிடாயை வர வைத்து விடுவதால், அது வயிற்றில் உள்ள குழந்தையை பாதிக்கும். எனவே கர்ப்பத்தின் போது கத்திரிக்காயை சாப்பிடவே கூடாது.

கர்ப்பிணிகள் பெருஞ்சீரகம் மற்றும் மல்லி விதைகளை தவிர்ப்பது நல்லது. ஏனெனில் இவை அதிகமானால் கர்ப்பப்பையின் வலிமை குறையும் வாய்ப்புகள் உள்ளது. மேலும், கர்ப்பிணிகள் எள் விதைகளை சாப்பிடக் கூடாது. ஏனெனில் இது சிலருக்கு கர்பப்பையின் தசைகளை தளர்த்தி, கருகலைப்பை ஏற்படுத்திவிடும்.

கர்ப்பிணிகள் சமைக்காத பச்சை முட்டை மற்றும் அரைவேக்காடு முட்டை போன்றவற்றை சாப்பிடக் கூடாது. அதனால் சில நேரத்தில் வயிற்றுப்போக்கு, வாந்தி, வயிற்று வலி போன்ற பிரச்சனையை ஏற்படுத்தும்.