பாகிஸ்தான் மீது போர் தொடுக்க வேண்டும்.! வெடித்தது இளைஞர்களின் போராட்டம்.!!

உலக நாடுகளையே திரை வைத்த பயங்கரவாதிகளின் தாக்குதல் இந்தியாவில் அரங்கேறியுள்ளது. நேற்று காஷ்மீர் புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதிகளால் நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்தில் 38 துணை ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்துள்ளனர்.

காஷ்மீர் புல்வாமா மாவட்டத்தில் 54 பட்டாலியன் படை பிரிவின் 2500 வீரர்கள் 70 வாகனங்களில் சென்று கொண்டிருந்த போது, அதில் இரண்டு பேருந்துகளின் மீது வெடிமருந்துகள் நிரப்பிய மற்றொரு வாகனம் மோதி வெடிக்கப்பட்டுள்ளது.

இந்த தாக்குதல் சம்பவம் ஜெய்ஸ் இ முகமது என்ற பாகிஸ்தான் அமைப்பு உள்ளூர் பயங்கரவாதிகள உதவியுடன் நடத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பயங்கரவாதிகளின் இந்த திடீர் தாக்குதலில் 38 துணை இராணுவ வீரர்கள் பலியாகியுள்ளனர்.

இந்த தாக்குதல் சம்பவத்திற்கு பிரதமர் மோடி அவர்கள், காஷ்மீர் தீவிரவாத தாக்குதலுக்கு காரணமானவர்கள் உறுதியாக தண்டிக்கப்படுவார்கள் என்றும் இந்த தாக்குதல் சம்பவத்திற்கு, கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என்றும் பிரதமர் மோடி அவர்கள் உறுதியளித்துள்ளார்.

இந்த தாக்குதல் சம்பவத்தை கண்டித்து நாடு முழுவதும் துக்கம் அனுசரிக்கப்பட்டது வரும் நிலையில், தலைநகர் டெல்லியில், உள்ள பாகிஸ்தான் தூதரகம் முன்பு கூடிய இளைஞர்கள், பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்தில், பாகிஸ்தான் நாட்டு தேசிய கொடிகளையும் எரித்த அவர்கள், அந்நாட்டு அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர். மேலும், இந்த தாக்குதலுக்கு இந்திய அரசு சரியான பதிலடி கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர்.

இதேபோல், பீகார் மாநிலத்தில் நடைபெற்ற போராட்டத்தில் கலந்துகொண்ட இளைஞர்கள் ஒன்று கூடி பாகிஸ்தானுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பி, பாகிஸ்தான் நாட்டு தேசிய கொடியை எரித்தனர். மேலும், பாகிஸ்தான் நாடு மீது இந்தியா போர் தொடுக்க வேண்டும் என்றும் ஆக்ரோஷமாக கோஷமிட்டனர்.

இத தாக்குதலில் பலியான இராணுவ நீரர்களுக்கு சேலம் அரசு கலைக் கல்லூரி மாணவ, மாணவிகள் மலர்தூவி அஞ்சலி செலுத்திய மாணவர்கள் இந்த தாக்குதலுக்கு இந்தியா இராணுவம் பதிலடி கொடுக்கும் என்ற நபீக்கை உள்ளதாக தெரிவித்துள்ளனர்.