சாண்ட்விச்சை திருடி மாட்டி கொண்ட மத்திய மந்திரி!!

ஸ்லோவேனியா நாட்டின் ஆளும் கட்சியாக இருப்பது எல்எம்எஸ் கட்சி ஆகும். அக்கட்சியியை சேர்ந்த தரிஜ் கிரஜ்சிச் (54) என்பவர் பாராளுமன்ற உறுப்பினர் ஆக இருக்கின்றார்.

சில நாட்களுக்கு முன்னர் லியூப்லியானா நகரத்தில் ஒரு பல்பொருள் அங்காடியில் சாண்ட்விச் வாங்க சென்றுள்ளார். அப்பொழுது, கடையில் இருந்த ஊழியர் எவ்வளவு அழைத்தும் காதில் வாங்காமல் இருந்தால் அங்கிருந்த சாண்ட்விச் ஒன்றை எடுத்துக்கொண்டு சென்றுள்ளார்.

எம்பி சாண்ட்விச்சை திருடி சென்றதாக பின்னர் சர்ச்சை கிளம்பியது. தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்த எம்பி மன்னிப்பு கோரி தனது பதிவியை ராஜினாமா செய்துள்ளார்.

இது அப்பகுதியில் பெரும் பார்ப்பப்பை ஏற்படுத்தியுள்ளது. “கடையில் இருந்த ஊழியர்கள் என்னை கண்டுகொள்ளாததால் ஒரு கட்டத்தில் எரிச்சலுற்று, அந்த சாண்ட்விச்சை எடுத்துக்கொண்டு சென்றேன். சிறிது நேரத்தில் பணம் செலுத்த திரும்பி வந்தேன். மூன்று நிமிடங்களாவது நான் காத்திருந்திருக்க வேண்டும்” என கூறினார்.