யாழ்ப்பாணத்தில் பெண்ணொருர் நோய்வாய்ப்பட்ட நிலையில் இன்று உயிரிழந்துள்ளதாக சாவகச்சேரி வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.சாவகச்சேரி வடக்கு மடத்தடியைச் சேர்ந்த 56 வயதான இராஜகுலசிங்கம் தயாரூபி என்ற குடும்பப் பெண்ணே உயிரிழந்துள்ளார்.
மகளின் திருமணத்துக்காகப் போடப்பட்ட பந்தல் கழற்ற முன்னர் தாயார் உயிரிழந்தமை அந்தப் பகுதி மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.கடந்த ஞாயிற்றுக்கிழமை மகளுக்கு திருமண நிகழ்வு இடம்பெற்றது. மகளின் திருமண காலத்தில் காய்ச்ச்ல் ஏற்பட்ட போதிலும், சிகிச்சை பெறாத நிலையில் நேற்று சாவகச்சேரி வைத்தியசாலையில் தாயார் சிகிச்சை பெற்றார்.
எனினும், இன்றையதினம் திடீரென மயக்கம் அடைந்து வீழ்ந்துள்ளார். உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதும், அவர் ஏற்கனவே உயிரிழந்துள்ளார் என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.இறப்புத் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்ட சாவகச்சேரி பொலிஸார், சாவகச்சேரி நீதிமன்றில் அறிக்கை தாக்கல் செய்திருந்தனர்.
அறிக்கையினைப் பார்வையிட்ட நீதிவான் பிரதேச திடீர் இறப்புவிசாரணை அதிகாரி திருமதி சி.தவமலர் மூலம், விசாரணைகளை நடாத்தி அறிக்கை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டார்.