பிப்ரவரி 14 இன்று உலகம் முழுவதும் காதலர் தினம் கொண்டாடப்பட்டது. இந்த காதலர் தினத்தில், காதலர்கள் தங்களது காதலை வெளிப்படுத்தும் விதமாக பல்வேறு பரிசு பொருட்களை வழங்கி தங்களது துணையை மகிழ்ச்சிபடுத்தினர்.
உல்லாச இடங்களுக்கு செல்வது, பல்வேறு விதமான பொருட்களை வாங்கி மகிழ்வது, திரையரங்குகள் செல்வது, ரோஜாக்கள் கொடுத்து காதலை தெரிவிப்பது, சாக்குலேட்டுகள் வழங்குவது என பல்வேறு விதமாக கொண்டாடினர்.
இன்னிலையில் மத்திய பிரதேசத்தில் ஜுனைத் கான் என்பவர் ஜெயா சிங் பர்மர் என்ற திருநங்கையை 2 வருடமாக காதலித்து வந்துள்ளார். நேற்று காதலர் தினத்தில் தனது குடும்பத்தின் எதிர்ப்பையும் மீறி, தனது காதலியை, கோவிலில் இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டார்.
தொடர்ந்து, இஸ்லாமிய முறைப்படியும் அவரை திருமணம் செய்ய உள்ளார். தங்களது திருமணத்தை குடும்பம் ஏற்றுக்கொள்ள வேண்டும். அப்படி ஏற்காவிட்டாலும், காதலியுடன் தான் வாழ்வேன் என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.