இந்தியாவில் ஒவ்வோர் ஆண்டும் 8 லட்சத்துக்கும் மேலானோர் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர். சுமார் 3 லட்சம் பேர் புற்றுநோயால் இறக்கிறார்கள் என தக்வல்கள் வெளியாகி உள்ளன. நமது உடலில் சுத்திகரிப்பு நடக்கும் சிறுநீரக மண்டலத்தில், புற்றுநோய் வராமல் தடுக்க செய்ய வேண்டிய வழிகள் இருக்கின்றன. தற்போதைய வாழ்கை முறையில் அதிகப்படியானோருக்கு சிறுநீரக புற்றுநோய் அதிகம் ஏற்படுகிறது.
சிறுநீர்ப்பை என்பது சிறுநீரகத்திற்கு முன்பாக சிறுநீரை சேமிப்பதற்கான செயல்பாட்டை செயல்படுத்தும் கழிவுப்பொருட்களின் பகுதியாகும். சிறுநீர்ப்பை சிறப்பு உயிரணுக்களோடு இணைக்கப்பட்டுள்ளது. இந்த உயிரணுக்கள் தொடர்ச்சியான பெருக்கத்தின் ஒரு குறிப்பிட்ட கட்டத்தை அடைந்தால், அவை புற்றுநோயாகி விடுகின்றன. மருந்து சிகிச்சை, அறுவை சிகிச்சை, கதிர்வீச்சு சிகிச்சை, பேலியேட்டிவ் சிகிச்சை போன்றவை புற்றுநோயை கட்டுப்படுத்துகின்றன.
ஆனால் இதனை எளியவழியில் கட்டுப்படுத்தலாம். சிறுநீரக புற்றுநோய் ஆபத்தை தடுக்க ஆரஞ்சு பழச்சாறு, மிளகாய் தூள், கீரை, தக்காளி, பீன்ஸ், கேரட், முட்டைக்கோஸ் ஆகியவை புற்றுநோய் கட்டிகள் உண்டாகாமல் தடுக்கும்.
திராட்சை, ஆரஞ்சு ஆகியவை புற்றுநோய் கட்டிகளின் வளர்ச்சிக்கு தடையை உண்டாக்கும். கீரைகளில் வைட்டமின் ‘E’ உள்ளதால், 42 சதவிதம் வரை சிறுநீரக புற்றுநோயின் ஆபத்தை குறைக்கும் என சிகிச்சையாளர்கள் கூறுகின்றனர்.
மாறிவரும் வாழ்க்கைச் சூழலாலும் மாசுபட்ட சுற்றுச்சூழலாலும் கேடுகெட்ட உணவின் ஆதிக்கத்தாலும் உலக அளவில் புற்றுநோய்ப் பாதிப்பு ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. இருப்பினும், இன்றைய நவீனத் தொழில்நுட்பம், புற்றுநோய்க்குத் தரப்படும் கதிர்வீச்சு சிகிச்சையில் புதிய முன்னேற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.