சகோதரனின் மனைவி கூறிய வார்த்தை! குழந்தையை கொன்று இரத்தத்தை குடித்த கொடூர அத்தை.!

ஆந்திர பிரதேச மாநிலத்தில் வசித்து வருபவர் சிரஞ்சீவி. இவரது மனைவி வதம்லா ரஸ்மோ. இவர்கள் இவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ரஸ்மோ கோபித்துக்கொண்டு தனது சகோதரரின் வீட்டிற்கு சென்று தங்கியுள்ளார்.

ஆனால் அங்கு ரஸ்மோ வீட்டு வேலை எதுவும் செய்யாமல் பொழுதுபோக்கி கொண்டு இருந்துள்ளார். இதனால் வேலைப்பளு அதிகமாகி ஆத்திரமடைந்த ரஸ்மோ சகோதரரின் மனைவி சின்னம்மி அவரை கணவர் வீட்டிற்கு செல்லுமாறு திட்டியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த ரஸ்மோ, இவ்வாறு பேசினால் உன்னுடைய குழந்தையை கொன்றுவிடுவேன் என மிரட்டியுள்ளார். ஆனால் அவர் ஏதோ கோபத்தில் சொல்கிறார் என சின்னம்மி சாதாரணமாக விட்டுள்ளார்.

இந்நிலையில் கோபத்தில் இருந்த ரஸ்மோ, சின்னமியின் இரு மகள்களையும் மலைபகுதிக்கு அழைத்து சென்று, 6 வயது சிறுமியின் கழுத்தை அறுத்து ரத்தை குடித்துள்ளார். இதனை பார்த்து பயந்துபோன 4 வயது சிறுமி அங்கிருந்து தப்பி சென்று தனது குடும்பத்தாரிடம் கூறியுள்ளார்.

இதனைதொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த ஊர்மக்கள், ரஸ்மோவை பிடித்து மரத்தில் கட்டி வைத்தனர். பின்னர் இதுகுறித்து போலீசாருக்கும் தகவல் அளித்துள்ளனர்.

அதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், இறந்தசிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் மரத்தில் கட்டிவைத்திருந்த ரஸ்மோவை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.