கணவரின் கண் எதிரிலேயே மனைவி துடி துடித்து உயிரை விட்ட பரிதாபம்..!

சென்னை அருகே சிந்தாதரிப்பேட்டையில் கணவனுடன் இருசக்கர வாகனத்தில் சென்ற இளம்பெண் லாரி மோதியதில் கணவன் கண் எதிரே பலியானார். பொதுமக்கள் தாக்கியதில் வட மாநில லாரி ஓட்டுநர் காயமடைந்தார்.

சென்னை அண்ணாசாலை மீரான் சாகிப் பிரதான தெருவில் வசிப்பவர் சரவணன். இவரது மனைவி சரஸ்வதி. இரவு உறவினர் இல்ல நிகழ்ச்சிக்காக சரஸ் வதி தனது கணவர் மற்றும் தனது 2 பிள்ளைகளுடன் சென்றுவிட்டு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பியுள்ளார்.

மோட்டார் சைக்கிளை சரவணன் ஓட்டிச் சென்றுள் ளார். சிந்தாதிரிப்பேட்டை டாம்ஸ் சாலையில் சரவணன் குடும்பத்தினர் செல் லும்போது எதிரில் லோடு இறக்கிவிட்டு வந்த ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த சரக்கு லாரி அவர்கள் மீது மோதியுள்ளது.

லாரி மோதியதில் சரவணன், சரஸ்வதி மற்றும் அவரது பிள்ளைகள் சாலையில் விழுந்துள்ளனர். இதில் சரஸ்வதியின் தலை மீது லாரியின் சக்கரம் ஏறியதில் சம்பவ இடத்திலேயே சரஸ்வதி தலை நசுங்கி பரிதபமாக உயிரிழந்தார்.

சரவணனும், குழந்தைகளும் காயமின்றி தப்பினர். விபத்தில் மனைவி உயிரிழந்ததைப் பார்த்த சரவணன் கதறி அழுதார். விபத்தைக்கண்ட பொதுமக்கள் லாரி ஒட்டுநர் ஹரியானாவை சேர்ந்த லாகன் சிங் என்பவரையும், கிளீனரையும் சரமரியாக தாக்கினர்.

விபத்து குறித்து போக்குவரத்து போலீஸாருக்கு தகவல் கிடைத்ததை அடுத்து அங்கு வந்த போலீஸார் சரஸ் வதியின் உடலைக் கைப் பற்றி பிரேத பரிசோதனைக்காக கஸ்தூரிபாய் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பொதுமக்கள் தாக்கியதால் பலத்த காயமடைந்த லாரி ஓட்டுநர் லாகன் சிங் ராயப்பேட்டை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.