ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், முருகன், நளினி, சாந்தன் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் அவர்கள் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் தண்டனை பெற்று வருகின்றனா்.
மேலும் இவர்கள் 7 போ் விடுதலை குறித்து மாநில அரசு, ஆளுநருக்கு பரிந்துரை கடிதம் அனுப்பிய நிலையிலும், தற்போது வரை இது குறித்த எந்தவித முடிவும் எடுக்கப்படாமல் உள்ளது.
இந்நிலையில் 7 தமிழர்களை விடுதலை செய்யக் கோரி, மணமக்கள் திருமண மேடையில் பாதைகைகளை ஏந்தி அரசுக்கு கோரிக்கை வைத்த புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
திண்டுக்கல் மாவட்டத்தில் வசித்து வருபவர் மணிவண்ணன். இவர் மே பதினேழு இயக்கத்தின் உறுப்பினராக உள்ளார். இவருக்கும் வினோதினி என்பவருக்கும் இன்று திண்டுக்கலில் திருமணம் நடைபெற்றது.
அப்போது மணமக்கள் மணிவண்ணன் மற்றும் வினோதினி திருமண மேடையில் 7 தமிழர்களை விடுலை செய், சட்டமன்ற தீர்மானத்திற்கு உயிர் கொடு என்ற பதாதையை ஏந்தி ஏழு தமிழர்களையும் விடுலை செய்ய வலியுறுத்தி கோரிக்கை வைத்தனர்.
மேலும் திருமணத்திற்கு வருகை தந்த மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி மற்றும் இயக்கத்தினரும் அத்தகைய பதாகையை ஏந்தியிருந்தனர்.
இதுகுறித்த புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.