யாழில் இளைஞன் மீது கோரமான முறையில் கத்திக் குத்து!

யாழ்ப்பாணத்தில் சற்று முன்னர் இளைஞர் மீது கொடூரமான முறையில் கத்திக் குத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

தென்மராட்சி மட்டுவில் பகுதியைச் சேர்ந்த சுமார் 30 வயது மதிக்கத்தக்க இளைஞன் மீதே தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

உடலில் பாரிய காயங்கள் ஏற்படும் வகையில் சரமாரியாக கத்திக் குத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

தாக்குதலுக்கு இலக்கான இளைஞன் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

எனினும் அவர் ஆபத்தான கட்டத்திலுள்ளமையினால் உடனடியாக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.