மகாராஷ்டிரா கல்யாண் பகுதியைச் சேர்ந்த ரஜினீஷ் ராஜ்பாய் என்பவர் தனது போனில் எப்போதும் பப்ஜி கேம் விளையாடிக் கொண்டிருப்பார். அதே போல் சம்பவ தினத்தன்றும் விளையாடி கொண்டிருந்துள்ளார்.
இதனால், செல்போன் ஜார்ஜ் வேகமாக குறையவே போன் ஆப் ஆகிவிட்டது போலும். உடனே ஜார்ஜரை தேடியவர் அது கிடைக்காமல் போனதும் தனது தங்கையிடம் கேட்டுள்ளார்.
ஆனால், ஜார்ஜர் அறுந்த நிலையில் வீட்டில் கிடைக்கவே தங்கையிடம் சண்டையிட்டுள்ளார். அவர் தங்கை தனக்கு நிச்சயிக்கப்பட்ட மணமகனுடன் செல்போனில் உடையாடி கொண்டிருந்தார்.
இதனால் போனை பிடுங்கி அவரிடம் சண்டையிட்ட ரஜினீஷ் தனது தங்கைக்கு நிச்சயமான ஓமுடன் தகராறு முற்றி கைகலப்பு வரை செல்லவே, ஓமை கத்தியால் குத்தியுள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.