பிரபல நடிகை அதிரடி!!

நேற்று முன்தினம் காஷ்மீர் புல்வாமா மாவட்டத்தில் ஜெய்ஷ்-இ-முகமது என்ற பயங்கரவாதி மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் மீது நடத்திய கொடூர தாக்குதலில் 40-க்கும் மேற்பட்ட வீரர்களை பலியாகியுள்ளனர்.

இச்சம்பவம் நாடு முழுவதும் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதலை ஏற்படுத்திய பயங்கரவாதிகளுக்கு அரசியல் தரப்பு மட்டுமல்லாது அனைத்து தரப்பில் இருந்தும் பெரிய அளவில் கண்டனம் குவிந்து வருகிறது.

இந்நிலையில் மும்பையில் செய்தியாளர்களிடம் பேசிய நடிகை கங்கனா ரனாவத், “இந்திய மக்களுக்காக துணை ராணுவ படை வீரர்கள் ரத்தம் சிந்தி உள்ளனர். இது பாகிஸ்தானின் கோழைத்தனமான நடவடிக்கை. இதற்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும்.

இந்த நேரத்தில் இந்தியாவிற்கு அமைதி குறித்து பாடம் எடுப்பவர்கள் முகத்தில் கரியைப் பூசி, கழுதை மீது ஏற்றி, நடுரோட்டில் வைத்து கன்னத்தில் அறைய வேண்டும்.

இந்த சமயத்தில் பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்கவில்லை என்றால் இந்தியாவை கோழை என்று உலக நாடுகள் அனைத்தும் நினைத்து விடும்” என மிகவும் ஆவேசமாக கூறியுள்ளார்.