கடந்த வருடம் இம்ரான் கான் பதவியேற்பு விழாவில் பாகிஸ்தான் ராணுவத் தளபதியைக் கட்டி அணைத்ததற்காக பஞ்சாப் அமைச்சரும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான நவ்ஜோத் சிங் சித்து கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி இருந்த நிலையில், தற்போது காஷ்மீரில் நடந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானுக்கு ஆதரவாக கருத்துத் தெரிவித்தாக அவரை பதவியைவிட்டு நீக்குமாறு மொத்த இந்திய மக்களுக்கு கோரிக்கை வைத்து வருகின்றனர்.
COAS Gen Bajwa meets Navjot Singh Sidhu at the PM-elect’s oath taking ceremony. https://t.co/wl4zZlL0G6 pic.twitter.com/5KZFheq1WS
— Dawn.com (@dawn_com) August 18, 2018
நேற்று முன்தினம் காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா மாவட்டம் அவந்திபோரா பகுதியில் அமைந்துள்ள தேசிய நெடுஞ்சாலையில் 78 வாகனங்களில் சுமார் 2,500-க்கும் மேற்பட்ட சிஆர்பிஎப் வீரர்கள் ஸ்ரீநகர் நோக்கிச் சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த 78 பேருந்துகளில் 2 பேருந்துகளின் மீது குறிவைத்து, வெடிகுண்டு நிரப்பிய பயங்கரவாதிகளின் வாகனம் ஒன்று நடத்திய தற்கொலை தாக்குதலில் 40 க்கும் மேற்பட்ட துணை இராணுவத்தினர் வீர மரணம் அடைந்தனர்.
மேலும் பலர் பேர் படுகாயமடைந்து தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். தீவிரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தான் ஆதரவு ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இந்த சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலையையும், சோகத்தையும், கொந்தளிப்பையும் ஒரு சேர ஏற்படுத்தியுள்ளது. வீர மரணம் அடைந்த வீரர்களுக்கு நாடு முழுவதும் மக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், பஞ்சாப் மாநில அமைச்சரான நவ்ஜோத் சிங் சித்து, கபில் சர்மா, ”தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்த ஒரு சிலர் செய்யும் இதுபோன்ற செயலுக்காக ஒரு நாட்டையே (பாகிஸ்தானையே) பழிசுமத்துவதா, ஒரு தனிநபரை பழிசுமத்துவதா” என்று கேள்வி எழுப்ப, மொத்த இந்தியர்களும் அவருக்கு எதிராக கிளம்பியுள்ளனர்.
இவரின் இந்த கருத்துக்கு ட்வீட்டர் வலைத்தளத்தில், #SackSidhuFromPunjabCabinet (பஞ்சாப் அமைச்சரவையில் இருந்து சித்துவை நீக்கம் செய்ய வேண்டும்) என்ற ஹாஸ் டேக் மூலம் திட்டி தீர்த்து வருகின்றனர்.