-
மேஷம்
மேஷம்: தடைகளை கண்டு தளரமாட்டீர்கள். அரசு அதிகாரிகளின் உதவியால் சில காரியங்களை முடிப்பீர்கள். தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. புது வேலை அமையும். வியாபாரத்தில் புது பங்குதாரரை சேர்ப்பீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.
-
ரிஷபம்
ரிஷபம்: கம்பீரமாக பேசி சில காரியங்களை முடிப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்யோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். நினைத்ததை முடிக்கும் நாள்.
-
மிதுனம்
மிதுனம்: கடந்த இரண்டு நாட்களாக இருந்த மனஉளைச்சல் நீங்கி எதிலும் ஒரு தெளிவு பிறக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். பணப்புழக்கம் கணிசமாக உயரும். தோற்றப் பொலிவுக் கூடும். வியாபாரத்தில் போட்டிகள் குறையும். உத்யோகத்தில் சக ஊழியர்களால் ஆதாயம் உண்டு. தடைகள் உடைபடும் நாள்.
-
கடகம்
கடகம்: காலை 8 மணி முதல் ராசிக்குள் சந்திரன் தொடங்குவதால் யாரையும் நம்பி பொறுப்புகளை ஒப்படைக்காதீர்கள். கொஞ்சம் பொறுமையை இழப்பீர்கள். குடும்பத்தினரிடம் கோபத்தை காட்டாதீர்கள். அடுத்தவர்கள் மனசு காயப்படும் படி பேசாதீர்கள். யாரையும் பரிந்துரை செய்ய வேண்டாம். தர்மசங்கடமான சூழல்களை சமாளிக்க வேண்டிய நாள்.
-
சிம்மம்
சிம்மம்: திட்டமிட்ட காரியங்களை அலைந்து, திரிந்து முடிப்பீர்கள். பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். யாரிடமும் உணர்ச்சிவசப்பட்டு பேசாதீர்கள். வழக்கில் அலட்சியம் வேண்டாம். வியாபாரத்தில் புது முதலீடு செய்யலாம். உத்யோகத் தில் சக ஊழியர்களால் பிரச்னைகள் வரக்கூடும். அலைச்சலுடன் ஆதாயம் தரும் நாள்.
-
கன்னி
கன்னி: பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். பிரியமானவர் களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். உத்யோ கத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். சிறப்பான நாள்.
-
துலாம்
துலாம்: உணர்ச்சிப் பூர்வமாகப் பேசுவதை விட்டு அறிவுப் பூர்வமாக செயல்படுவீர்கள். திடீர் முடிவுகள் எடுப்பீர்கள். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்யோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். உற்சாகமான நாள்.
-
விருச்சிகம்
விருச்சிகம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன் மனைவிக்குள் இருந்த மனப்போர் நீங்கும். தள்ளிப் போன விஷயங்கள் உடனே முடியும். உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கும். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலித மாகும். உத்யோகத்தில் பழைய சிக்கல்கள் தீரும். மனசாட்சி படி செயல்படும் நாள்.
-
தனுசு
தனுசு: காலை 8 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் சந்தேகப்படுவதை முதலில் நிறுத்துங்கள். குடும்பத்தில் உள்ளவர்களுடன் வளைந்துக் கொடுத்துப் போவது நல்லது. உங்களை நீங்களே குறைத்து மதிப்பிடாதீர்கள். உத்யோகத்தில் மறதியால் பிரச்னை வந்து நீங்கும். விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டிய நாள்.
-
மகரம்
மகரம்: கடினமான காரியங் களையும் எளிதாக முடிப்பீர் கள். சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். புதியவர்கள் அறிமுக மாவார்கள். வியாபாரத்தில் புது வேலையாட்கள் அமைவார்கள். உத்யோகத்தில் உங்களின் நிர்வாகத்திறமை வெளிப்படும். நன்மை கிட்டும் நாள்.
-
கும்பம்
கும்பம்: எதிர்பாராத பணவரவு உண்டு. பழைய உறவினர், நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். புதுப் பொருள் சேரும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்யோகத்தில் உங்களின் புதிய முயற்சிகளை அதிகாரி பாராட்டுவார். ஆதாயம் தரும் நாள்.
-
மீனம்
மீனம்: குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். அக்கம் பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் உங்கள் வேலைகளை பகிர்ந்துக் கொள்வார்கள். கவலை தீரும் நாள்.