கண்ணீர் விடும் தாய்! ஈழத்து சிறுமிக்கு இப்படி ஒரு சோகமா?

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாடல் நிகழ்ச்சி ஒன்றில் கனடாவில் வாழும் ஈழ சிறுமியான சின்மயி பங்கு பற்றி அனைவரது கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்து வருகின்றார்.

இந்நிலையில், இலங்கையில் இருந்து கனடா சென்ற பின்னர் இன்று வரையும் தாய் நாட்டுக்கு செல்ல முடியாத அவல நிலை ஏற்பட்டுள்ளதாக சின்மயி கூறியுள்ளார்.

இது குறித்து அவரின் தாய் கருத்து வெளியிடும் போது,

இலங்கையில் இருந்து பல்வேறு பிரச்சினையான சூழலில் கனடா சென்றதாகவும், சொந்த மண்ணையும், தாயையும் கூட நேரில் சென்று பார்க்க முடியாத சூழலில் இன்று வரை உள்ளதாகவும் கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தாய் நாட்டு பாரம்பரியம், கலாச்சாரத்தை கனடாவில் இருக்கும் எனது மகள் கற்க வேண்டும் என்பதற்காகவே இசை கற்றுக் கொடுத்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இதனை பார்த்த ரசிகர்கள் பலர் அதிர்ச்சியில் ஆறுதல் கூறியுள்ளனர். இந்த நிகழ்ச்சி மூலம் அவர்களை பார்க்க முடியும் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.