சவுந்தர்யா – விசாகன் தம்பதியினர் ஐஸ்லாந்துக்கு ஹனிமூன் சென்றுள்ளனர். அதற்கான புகைப்படங்களையும் அவர்கள் சமூகவலைதளங்களில் வெளியிட்டுள்ளனர்.
ரஜினிகாந்தின் இரண்டாவது மகள் சவுந்தர்யா தொழிலதிபர் விசாகன் திருமணம் கடந்த 11-ம் தேதி நடைபெற்றது.
இந்த திருமணத்தில் தமிழக முதல்வர், துணைமுதல்வர், எதிர்க்கட்சி தலைவர் உள்ளிட்ட ஏராளமான அரசியல் பிரபலங்களும், திரைத்துறை பிரபலங்களும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
#Iceland #Honeymoon #Freezing #LovingIt #LivingLife #GodsAreWithUs #MissingVed ❤️❤️❤️❤️❤️❤️ pic.twitter.com/lysBJn67BM
— soundarya rajnikanth (@soundaryaarajni) February 15, 2019
புதுமணத் தம்பதிகளான விசாகன் மற்றும் சவுந்தர்யா இருவரும் ஐஸ்லாந்து நாட்டுக்கு தேனிலவு சென்றுள்ளனர். கடுங்குளிர் மற்றும் பனி உறைந்த இடத்தில் இருவரும் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர். இப்புகைப்படம் வைரலாகி வருகின்றது.
தேனிலவு பயணத்தில் தனது மகன் வேத்-ஐ மிஸ் செய்தாலும் கடவுள் தங்களுடன் இருப்பதாக சவுந்தர்யா தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.