முதல் அடியை கொடுத்த இந்தியா.!! இந்தியாவுடன் கைகோர்க்கும் 50 நாடுகள்.!

காஷ்மீர் புல்வாமா மாவட்டத்தில் நேற்று முன்தினம் பயங்கரவாதிகளால் நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்தில் 38 துணை ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டது உலகம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு இந்தியா பதிலடி கொடுத்தாக வேண்டும் இந்திய மக்களும் குரல் எழுப்பி வருகின்றனர்

காஷ்மீர் புல்வாமா மாவட்டத்தில் 54 பட்டாலியன் படை பிரிவின் 2500 வீரர்கள் 70 வாகனங்களில் சென்ற கான்வேயில் இரண்டு பஸ்சில் மற்றொரு வாகனம் மோதி வெடிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதல் சம்பவம் ஸ்கார்பியோ போன்ற ஒரு காரில் வெடிமருந்தை நிரப்பி மோதவிட்டு நடந்துள்ளது.

இந்த தாக்குதல் சம்பவம் ஜெய்ஸ் இ முகமது என்ற பாகிஸ்தான் அமைப்பு உள்ளூர் பயங்கரவாதிகள உதவியுடன் நடத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது. பயங்கரவாதிகளின் இந்த திடீர் தாக்குதல் நடத்தியதில் 38 துணை இராணுவ வீரர்கள் பலியாகியுள்ளனர்.

இந்த தாக்குதல் சம்பவத்திற்கு பிரதமர் மோடி அவர்கள் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார். மேலும் தற்கொலை தாக்குதலுக்கு எப்படிப்பட்ட பதிலடி கொடுப்பது அமைச்சர்களுடன் ஆலோசனை செய்தபின் மோடி வெளியிட்டுள்ள அறிவிப்பில், காஷ்மீர் தீவிரவாத தாக்குதலுக்கு காரணமானவர்கள் உறுதியாக தண்டிக்கப்படுவார்கள் என்றும் இந்த தாக்குதல் சம்பவத்திற்கு, கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என்றும் பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார்.

மேலும் இந்த தாக்குதல் சம்பவத்திற்கு, குடியரசு தலைவர், காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், , தமிழக முதல்வர், மாநில கட்சி தலைவர்கள் உள்ளிட்டபல தலைவர்களும் தங்களின் கண்டனத்தை தெரிவித்து உள்ளனர்.

இந்நிலையில், இந்த தாக்குதல் சம்பவத்திற்கு உலக நாடுகள் அனைத்தும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அமெரிக்கா, ரஷ்யா, ஜெர்மன் உள்ளிட்ட 50 நாடுகள், இந்திய நிலைப்பாட்டுக்கு 50 நாடுகள் ஆதரவு தெரிவித்து, இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் நாட்டுக்கு கண்டனத்தை தெரிவித்துள்ளது.

பாகிஸ்தானை தனிமைப்படுத்தும் பணியில் இந்தியா தீவிரம் இந்தியாவிற்கு தங்களது ஆதரவை தெரிவித்து, பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டிருந்த Most Favored Nation என்ற அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்துள்ளது.

இதனை ரத்து செய்வதனால் பாகிஸ்தானிலிருந்து இந்தியாவிற்கு இறக்குமதியாகும் பொருட்களுக்குச் சுங்கவரி ஆனது 200 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனை மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி சற்றுமுன் தெரிவித்துள்ளார் இதன்மூலம் பாகிஸ்தானுக்கு பொருளாதாரத்தில் முதலடியை கொடுத்துள்ளது மத்திய அரசு.

அமெரிக்காவின் வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிவிப்பில், ”பயங்கரவாதிகளுக்கு ஆதரவும், புகலிடம் வழங்குவதையும் பாகிஸ்தான் உடனடியாக நிறுத்த வேண்டும். பயங்கரவாதத்துக்கு எதிரான ஒத்துழைப்பு இந்த தாக்குதல் மூலம் வலுப்படவே செய்யும்” என்று தெரிவித்துள்ளது.

இதேபோல் ரஷ்ய அதிபர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ”காஷ்மீர் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு எனது மனமார்ந்த ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த மிகப்பெரிய கொடூர குற்றத்திற்கு ரஷ்யா தனது கடும் கண்டனத்தை தெரிவித்து, இதற்கு காரணமானவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய கூட்டமைப்பு இந்தியாவின் எதிர்கால நடவடிக்கைகளுக்கு தங்கள் முழு ஆதரவு இருக்கும் என அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே, காஷ்மீரில் வன்முறை பரவாமல் தடுக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் மற்றும் பாதுகாப்புகள் குறித்து உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெற்ற உயர்மட்ட குழுவில் ஆலோசனை நடத்தப்பட்டது.

ஆலோசனைக்கு பின் உள்துறை அமைச்சகம் வெளியிட்டு அறிவிப்பில்,

* அனைத்து மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.

* புல்வாமா தாக்குதலை தொடர்ந்து ஜம்மு காஷ்மீர் மாணவர்கள், மக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

* காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள தீவிரவாத அமைப்புகளை வேட்டையாட, தேவையான சாத்தியமான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி கூட்டத்தில் அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.