இதுதான் முதல் பாகிஸ்தானுக்கு எதிராக முதல் பதிலடி என்று சொல்லும் அளவிற்கு மத்திய அரசு சற்று முன் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாவட்டம் புல்வாமா மாவட்டத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற தீவிரவாதத் தற்கொலைப்படை தாக்குதலில் துணை பாதுகாப்பு படை வீரர்கள் 41 பேர் பலியானது நாட்டையே உலுக்கியது. இரண்டு நாட்களாக அந்த துயரத்தில் இருந்து மீள முடியாமல் மக்கள் பல இடங்களில் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். மத்திய அரசு உடனடியாக ஏதேனும் செய்தே ஆகவேண்டும் என்று கோஷமிட்டு வருகிறார்கள்.
இரண்டு நாட்களாக பல்வேறு பதிலடி அறிவிப்புகளை வெளியிட்டு, மக்களுக்கு ஆறுதல் கூறி வந்த மத்திய அரசு தற்போது பாகிஸ்தானுக்கு எதிரான முதல் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டிருந்த Most Favored Nation என்ற அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்துள்ளது.
இதனை ரத்து செய்வதனால் பாகிஸ்தானிலிருந்து இந்தியாவிற்கு இறக்குமதியாகும் பொருட்களுக்குச் சுங்கவரி ஆனது 200 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனை மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி சற்றுமுன் தெரிவித்துள்ளார் இதன்மூலம் பாகிஸ்தானுக்கு பொருளாதாரத்தில் முதலடியை கொடுத்துள்ளது மத்திய அரசு.