ராணுவ பணிக்கு போக வேண்டாம் என கெஞ்சிய மனைவி… கேட்காததால் நேர்ந்த விபரீதம்

இந்தியாவில் விடுமுறைக்கு ஊருக்கு வந்த ராணுவ வீரர் மீண்டும் பணிக்கு திரும்புவதாக கூறியதால் மனமுடைந்த மனைவி தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் மாநிலத்தின் ராஜ்கோட்டை சேர்ந்தவர் புபேந்திரசின் ஜேத்வா. இவர் மனைவி மீனாட்சி (22)

ராணுவ வீரரான ஜேத்வா காஷ்மீரின் குல்மர்க் நகரில் பணி செய்து வந்த நிலையில் விடுமுறையில் ஊருக்கு வந்திருந்தார்.

இந்த சமயத்தில் தான் கடந்த 14ஆம் திகதி தீவிரவாத தாக்குதலில் 45 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.

இந்நிலையில் விடுமுறை முடிந்து ஜேத்வா சில நாட்களில் பணிக்கு திரும்ப தயாராகி கொண்டிருந்தார்.

ஆனால் மீண்டும் பணிக்கு சென்றால் தனது கணவர் உயிருக்கும் தீவிரவாதிகளால் ஆபத்து ஏற்படுமோ என பயந்த மீனாட்சி, ஜேத்வாவை மீண்டும் பணிக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தினார்.

ஆனால் பணிக்கு திரும்புவதில் உறுதியாக இருந்தார் ஜேத்வா.

இதனால் மனமுடைந்த மீனாட்சி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சம்பவம் குறித்து பொலிசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.