தி.மு.க-வின் மகளிரணிச் செயலாளரான கனிமொழி கொடுத்த அழுத்தத்தினால், மலேசியாவில் சிக்கித்தவித்த 49 தமிழர்கள் பத்திரமாக மீட்கப்பட உள்ள சம்பவம் அனைவருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தி.மு.க-வின் மகளிரணிச் செயலாளரான கனிமொழி, கடந்த நவம்பர் மாதம் நெல்லையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றிற்காக சென்றிருந்த போது, தலைவன் கோட்டையைச் சேர்ந்த பெண்கள் கோரிக்கை ஒன்றினை முன்வைத்தனர்.
அதில், எங்கள் ஊரிலிருந்து மலேசியாவிற்கு மின்சார கோபுரம் அமைக்க சென்ற 49 பேரை யாரோ பிடித்து வைத்து சரியாக உணவு கொடுக்காமல் கொடுமை படுத்துகிறார்கள்.
அவர்களை பத்திரமாக மீட்டு கொடுக்க நடவடிக்கைக்கு எடுக்குமாறு கோரிக்கை விடுத்திருந்தனர்.
அதனை ஏற்ற கனிமொழி இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுக்க ஆரம்பித்தார்.
அதன்பேரில் சுஷ்மாவும் மலேசிய அதிகாரிகளை தொடர்பு கொண்டு, சிக்கித்தவிக்கும் தமிழர்களை மீட்கும் நடவடிக்கைகளில் இறங்க ஆரம்பித்தார்.
விசா இல்லாமல் சிக்கிய தமிழர்கள் தொடர்பான வழக்கின் இறுதி விசாரணை இன்று நீதிமன்றத்தில் முடிந்துவிட்டது. இந்த நிலையில் சிக்கிய தமிழர்கள் 49 பேரும் நாளை தமிழகம் திரும்புவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.