செவித்திறனை பாதிக்கும் சில காரணிகள்!

செவித்திறனை பாதிக்கும் சில காரணிகள் குறித்து பார்ப்போம்,

ஹெட்போன்

உங்களுக்கு இசை அதிகம் பிடிக்கும் என்றால் இடைவிடாமல் அதிகம்கேட்கும் பழக்கம் இருந்தால் இதை மட்டும் பயன்படுத்தாதீர்கள். முக்கியமாக நான்கு நிமிடங்களுக்குமேல் இசையை தொடர்ந்து ஹெட்போனில் கேட்பது ஆபத்தானது. அது செவித்திறனை பாதிக்கலாம் இதுகுறித்து WHO அமைப்பு எச்சரிக்கையும் விடுத்துள்ளது. மேலும் தரமிக்க ஹெட்போன்கள்தான்பயன்படுத்த வேண்டும்

அலாரம்

நீங்கள் காலையில் சரியான நேரத்தில் எழ அலாரம் பயன்படுத்தும்பழக்கம் கொண்டவரா. அப்போ அலாரத்தை கொஞ்சம்தள்ளி வைத்து தூங்கவும். அலாரம் வைக்கும் கருவியை 60சென்டீமீட்டர் தூரத்தில் இருந்தால்அதன் சப்பதத்தின் அளவு 80டெசிபெல் ஆக இருக்கும் இதனால் படுக்கைக்கு பக்கத்தில் வைப்பதுமிகவு ஆபத்தானது.

எனவே உறங்கும் போது அறையின் மற்றொரு பகுதியில் வையுங்கள் அது உங்களைவிரைவில் எழுந்து செல்லவும் உதவியாக இருக்கும்.